• Jan 08 2025

மின் கட்டண திருத்த முன்மொழிவு - யாழ்ப்பாணத்தில் மக்கள் ஆலோசனை கேட்கும் கூட்டம்

Chithra / Jan 6th 2025, 2:26 pm
image


இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் பொது மக்கள் ஆலோசனை கேட்கும் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.

ஆணைக்குழுவின் மின்சார கட்டணம் திருத்த முன்மொழிவு தொடர்பாக வடக்கு மாகாண பொதுமக்களின் ஆலோசனை கேட்கும் கூட்டம் இன்று காலை யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர், இலங்கை மின்சார சபையின் நிறைவேற்று பணிப்பாளர், உதவி நிர்வாக பணிப்பாளர் மற்றும் துறைசார் அதிகாரிகள் பிரசன்னத்துடன் நடைபெற்ற குறித்த பொது மக்கள் ஆலோசனை கேட்கும் கூட்டத்தில்,

பொது அமைப்பின் பிரதிநிதிகள், துறைசார் வல்லுனர்கள், அரச்சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என வடமாகாணத்தில் இருந்து வந்திருந்த பலரும் தமது கருத்துக்களை முன்வைத்து இருந்தனர்.

இதேநேரம் மின்சார கட்டமைப்பின் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால், நாடு முழுவதும் உள்ள மாவட்ட செயலகங்களில் குறித்த பொது ஆலோசனை கேட்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றமை குதிப்பிடத்தக்கது.


மின் கட்டண திருத்த முன்மொழிவு - யாழ்ப்பாணத்தில் மக்கள் ஆலோசனை கேட்கும் கூட்டம் இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் பொது மக்கள் ஆலோசனை கேட்கும் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.ஆணைக்குழுவின் மின்சார கட்டணம் திருத்த முன்மொழிவு தொடர்பாக வடக்கு மாகாண பொதுமக்களின் ஆலோசனை கேட்கும் கூட்டம் இன்று காலை யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர், இலங்கை மின்சார சபையின் நிறைவேற்று பணிப்பாளர், உதவி நிர்வாக பணிப்பாளர் மற்றும் துறைசார் அதிகாரிகள் பிரசன்னத்துடன் நடைபெற்ற குறித்த பொது மக்கள் ஆலோசனை கேட்கும் கூட்டத்தில்,பொது அமைப்பின் பிரதிநிதிகள், துறைசார் வல்லுனர்கள், அரச்சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என வடமாகாணத்தில் இருந்து வந்திருந்த பலரும் தமது கருத்துக்களை முன்வைத்து இருந்தனர்.இதேநேரம் மின்சார கட்டமைப்பின் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால், நாடு முழுவதும் உள்ள மாவட்ட செயலகங்களில் குறித்த பொது ஆலோசனை கேட்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றமை குதிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement