காலமான முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த காலமாவதற்கு முன்னர், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தை உடனடியாக கையளிக்குமாறு, மனைவி சட்டத்தரணி சாமரி பெரேராவுக்கு பல தடவைகள் நினைவூட்டப்பட்டதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலைமையை கருத்தில் கொண்டு, உத்தியோகபூர்வ இல்லத்தின் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பான வீட்டு வாடகையை கூட அவர் செலுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலைமையால் பங்களாவை உரிய முறையில் கையகப்படுத்த முடியாது எனத் தெரிவித்த அமைச்சின் அதிகாரி ஒருவர், இந்த விடயங்களில் அமைச்சின் அதிகாரிகள் தன்னிடம் இருந்து போதிய ஆதரவைப் பெறவில்லை எனவும் கூறினார்.
அந்த உத்தியோகபூர்வ இல்லங்கள் தவிர, முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய மற்றைய அனைத்து இல்லங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
சனத் நிஷாந்த இல்லத்தின் மின்சாரம், நீர் இணைப்புகள் துண்டிப்பு அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை காலமான முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த காலமாவதற்கு முன்னர், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தை உடனடியாக கையளிக்குமாறு, மனைவி சட்டத்தரணி சாமரி பெரேராவுக்கு பல தடவைகள் நினைவூட்டப்பட்டதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலைமையை கருத்தில் கொண்டு, உத்தியோகபூர்வ இல்லத்தின் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அந்த உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பான வீட்டு வாடகையை கூட அவர் செலுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலைமையால் பங்களாவை உரிய முறையில் கையகப்படுத்த முடியாது எனத் தெரிவித்த அமைச்சின் அதிகாரி ஒருவர், இந்த விடயங்களில் அமைச்சின் அதிகாரிகள் தன்னிடம் இருந்து போதிய ஆதரவைப் பெறவில்லை எனவும் கூறினார்.அந்த உத்தியோகபூர்வ இல்லங்கள் தவிர, முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய மற்றைய அனைத்து இல்லங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.