• May 21 2025

திருமலையில் சிக்கிய யானை முத்துக்கள்: நால்வர் கைது..!

Sharmi / May 20th 2025, 8:34 am
image

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டைட் வீதியில் வைத்து யானை முத்துக்களுடன் நால்வரை திருகோணமலை - துறைமுக பொலிஸார் நேற்றையதினம்(19)  மாலை கைது செய்துள்ளனர்.

இதன்போது நான்கு யானை முத்துக்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அத்தோடு ஒரு பெண் மூன்று ஆண்கள் உட்பட நான்கு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கட்டுக்கஸ்தோட்டையை சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் யானைத் தந்தந்தங்களை விற்பனை செய்வதற்கு தயாராக இருந்த போது துறைமுக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் யானை முத்துக்கலுடன் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

திருமலையில் சிக்கிய யானை முத்துக்கள்: நால்வர் கைது. திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டைட் வீதியில் வைத்து யானை முத்துக்களுடன் நால்வரை திருகோணமலை - துறைமுக பொலிஸார் நேற்றையதினம்(19)  மாலை கைது செய்துள்ளனர்.இதன்போது நான்கு யானை முத்துக்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.அத்தோடு ஒரு பெண் மூன்று ஆண்கள் உட்பட நான்கு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் கட்டுக்கஸ்தோட்டையை சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் யானைத் தந்தந்தங்களை விற்பனை செய்வதற்கு தயாராக இருந்த போது துறைமுக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் யானை முத்துக்கலுடன் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement