• Nov 28 2024

தமிழ் பேசும் மக்களுக்காக அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்!

Chithra / Nov 27th 2024, 11:57 am
image

 

நாட்டில் சீரற்ற வானிலை நிலவி வருவதால் தொடர்ச்சியாக ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள், இடர்ப்பாடுகள் தொடர்பில் அறிவிக்க தமிழ் பேசும் மக்களுக்கென பிரத்தியேகமாக அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ் பேசும் மக்களுக்கள் 107 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு அனர்த்தம் தொடர்பில் அறிவிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 

இதேவேளை நாடளாவிய ரீதியில் மோசமான காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகளின் போதான அவசர சூழ்நிலைகளை அறிவிப்பதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் 24 மணிநேர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, 0112 027 148, 0112 472 757, 0112 430 912 மற்றும் 0112 013 051 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தகவல்களை அறிவிக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

disaster.ops@police.gov.lk என்ற மின்னஞ்சல் மூலமும் அந்த மையங்களைத் தொடர்புகொள்ள முடியும்.

பொலிஸ் தலைமையகத்தில் இந்த விசேட நடவடிக்கை மையம் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


தமிழ் பேசும் மக்களுக்காக அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்  நாட்டில் சீரற்ற வானிலை நிலவி வருவதால் தொடர்ச்சியாக ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள், இடர்ப்பாடுகள் தொடர்பில் அறிவிக்க தமிழ் பேசும் மக்களுக்கென பிரத்தியேகமாக அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி, தமிழ் பேசும் மக்களுக்கள் 107 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு அனர்த்தம் தொடர்பில் அறிவிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இதேவேளை நாடளாவிய ரீதியில் மோசமான காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகளின் போதான அவசர சூழ்நிலைகளை அறிவிப்பதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் 24 மணிநேர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.இதன்படி, 0112 027 148, 0112 472 757, 0112 430 912 மற்றும் 0112 013 051 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தகவல்களை அறிவிக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.disaster.ops@police.gov.lk என்ற மின்னஞ்சல் மூலமும் அந்த மையங்களைத் தொடர்புகொள்ள முடியும்.பொலிஸ் தலைமையகத்தில் இந்த விசேட நடவடிக்கை மையம் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement