வெளிநாடொன்றில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தென்கொரியாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி கந்தானை – நாகொட பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் பண மோசடியில் ஈடுபட்ட நிலையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளினால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான பெண்ணுக்கு எதிராக 15 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சந்தேக நபரை இன்று (09) நீர்கொழும்பு, நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு. பணமோசடியில் ஈடுபட்ட பெண் கைது.samugammedia வெளிநாடொன்றில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தென்கொரியாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி கந்தானை – நாகொட பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் பண மோசடியில் ஈடுபட்ட நிலையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளினால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.கைதான பெண்ணுக்கு எதிராக 15 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் கூறியுள்ளனர்.சந்தேக நபரை இன்று (09) நீர்கொழும்பு, நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.