காலி சிறைச்சாலையில் தற்போது 7 கைதிகள் காய்ச்சல் காரணமாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காலி சிறைச்சாலை அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
05 கைதிகள் காய்ச்சல் காரணமாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்
நேற்று (06) மேலும் இரு கைதிகள் காய்ச்சல் காரணமாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சில தினங்களுக்கு முன், காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் இறந்தமை, மூளைக் காய்ச்சலால் இறந்தது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது.
இதேவேளை, காலி சிறைச்சாலையில் பார்வையாளர்களைப் பார்ப்பது மற்றும் ஏனைய நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவும்,
புதிய கைதிகளை அகுனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்பவும் சிறைச்சாலை கட்டுப்பாட்டு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
காலி சிறை கைதிகளுக்கு மர்ம காய்ச்சல். பலர் வைத்தியசாலையில் அனுமதி. காலி சிறைச்சாலையில் தற்போது 7 கைதிகள் காய்ச்சல் காரணமாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காலி சிறைச்சாலை அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.05 கைதிகள் காய்ச்சல் காரணமாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (06) மேலும் இரு கைதிகள் காய்ச்சல் காரணமாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சில தினங்களுக்கு முன், காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் இறந்தமை, மூளைக் காய்ச்சலால் இறந்தது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது.இதேவேளை, காலி சிறைச்சாலையில் பார்வையாளர்களைப் பார்ப்பது மற்றும் ஏனைய நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவும், புதிய கைதிகளை அகுனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்பவும் சிறைச்சாலை கட்டுப்பாட்டு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.