EMS விற்பனை ஊக்குவிப்பு திட்ட நிகழ்ச்சியானது இலங்கை தபால் திணைக்களத்தினால் திருகோணமலை பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் கே.எம்.எஸ் நாமல் குமார தலைமையில் சனிக்கிழமை (08) திருகோணமலை மாவட்ட அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது திருகோணமலை நகர்ப்புறத்தை மையமாகக் கொண்டு அஞ்சல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் அஞ்சல் அலுவலகத்தில் இருந்து நடந்து சென்று ,துண்டு பிரசுரங்களை விநியோகித்தது மட்டுமன்றி EMS சேவை குறித்து பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தினர்.
திருகோணமலை நகரிலுள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களை இலக்காகக் கொண்டு இந்த விற்பனை ஊக்குவிப்பு நிகழ்ச்சி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
தபால் பொருட்களை துரிதமாகவும் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் உலகின் பல்வேறு பிரதேசங்களுக்கும் கொண்டு செல்வதற்கு உருவாக்கப்பட்ட சேவையே இதுவாகும்.
தற்போது இலங்கை உள்ளிட்ட 48 நாடுகள் இந்த EMS முறையில் பொருட்களைப் பரிமாற்றிக் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலையில் EMS விற்பனை ஊக்குவிப்பு நிகழ்ச்சி திட்டம் EMS விற்பனை ஊக்குவிப்பு திட்ட நிகழ்ச்சியானது இலங்கை தபால் திணைக்களத்தினால் திருகோணமலை பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் கே.எம்.எஸ் நாமல் குமார தலைமையில் சனிக்கிழமை (08) திருகோணமலை மாவட்ட அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற்றது.குறித்த நிகழ்வானது திருகோணமலை நகர்ப்புறத்தை மையமாகக் கொண்டு அஞ்சல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் அஞ்சல் அலுவலகத்தில் இருந்து நடந்து சென்று ,துண்டு பிரசுரங்களை விநியோகித்தது மட்டுமன்றி EMS சேவை குறித்து பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தினர். திருகோணமலை நகரிலுள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களை இலக்காகக் கொண்டு இந்த விற்பனை ஊக்குவிப்பு நிகழ்ச்சி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.தபால் பொருட்களை துரிதமாகவும் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் உலகின் பல்வேறு பிரதேசங்களுக்கும் கொண்டு செல்வதற்கு உருவாக்கப்பட்ட சேவையே இதுவாகும். தற்போது இலங்கை உள்ளிட்ட 48 நாடுகள் இந்த EMS முறையில் பொருட்களைப் பரிமாற்றிக் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.