• Mar 31 2025

நாடு முழுவதும் பணிகளை ஆரம்பித்த ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள்!

Chithra / Aug 29th 2024, 12:51 pm
image


ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று (29) காலை தமது கடமைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமைப் பார்வையாளராக நாச்சோ சான்செஸ் அமோ உள்ளார்.

நாச்சோ சான்செஸ் அமோ, ஸ்பெயினை பிரதிநிதித்துவப்படுத்தி ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவில் 10 முக்கிய பார்வையாளர்கள் உள்ளனர். 

மேலும், நாடு முழுவதும் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் 26 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

நாடு முழுவதும் பணிகளை ஆரம்பித்த ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று (29) காலை தமது கடமைகளை ஆரம்பித்துள்ளனர்.ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமைப் பார்வையாளராக நாச்சோ சான்செஸ் அமோ உள்ளார்.நாச்சோ சான்செஸ் அமோ, ஸ்பெயினை பிரதிநிதித்துவப்படுத்தி ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவில் 10 முக்கிய பார்வையாளர்கள் உள்ளனர். மேலும், நாடு முழுவதும் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் 26 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement