• Jul 03 2026

உயர் வருமான அந்தஸ்து கிடைத்தாலும், வறுமை கோட்டில் வாழ்பவர்கள் இருமடங்கு! ஹர்ஷ டி சில்வா அதிர்ச்சித் தகவல்

Chithra / Jul 3rd 2026, 3:29 pm
image


இலங்கை மீண்டும் உலக வங்கியினால் 'உயர் நடுத்தர வருமானம் பெறும் நாடு' என்ற அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் நாட்டின் எண்களுக்குப் பின்னால் இருக்கும் கசப்பான உண்மை என்னவெனில், நாட்டில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். 


உலக வங்கியின் புதிய வகைப்படுத்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,


இலங்கையின் மொத்த தேசிய வருமானம் டொலர் கணக்கீட்டில் உலக வங்கியின் வரம்பைத் தாண்டியதன் காரணமாக, நாம் இரண்டாவது முறையாக இந்த நிலையை அடைந்துள்ளோம். இதற்கு முக்கிய காரணம், 2023 மற்றும் 2024 காலப்பகுதியில் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 370 லிருந்து 300 ரூபாவுக்கு வலுவடைந்ததே தவிர, ஒட்டுமொத்த நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி அல்ல.  


கடந்த 2019ஆம் ஆண்டில் இலங்கை முதன்முறையாக இந்த உயர் நடுத்தர வருமான நிலையை எட்டியபோது, நாட்டின் மக்கள் தொகையில் வறுமை விகிதம் 11.5 சதவீதமாக மட்டுமே காணப்பட்டது. ஆனால், தற்போது 2025 ஆம் ஆண்டின் இறுதியில் அதே இலக்கை நாம் மீண்டும் தொட்டுள்ள போதிலும், நாட்டின் வறுமை விகிதம் 22.1 சதவீதமாக, அதாவது இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.  


அதுமட்டுமன்றி, உலக வங்கியின் உத்தியோகபூர்வ அறிக்கையின் பிரகாரம், 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நாட்டில் போதிய உணவுப் பாதுகாப்பு இல்லாத ஏழை மக்களின் எண்ணிக்கை தற்போது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சியூட்டும் உண்மையும் வெளிவந்துள்ளது.  


அரசாங்கத்தைச் சேர்ந்த சிலர் இந்த புதிய வகைப்படுத்தலை ஒரு பெரிய வெற்றியாகக் கொண்டாடி வருகின்ற போதிலும், ஒரு நாட்டின் உண்மையான நிலையான அபிவிருத்தி என்பது ஒரு சிறிய குழுவினரிடம் மட்டும் செல்வம் குவிவதல்ல் மாறாக, நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் அதன் பலன்கள் சென்றடைவதே ஆகும்.

 

தற்போதைய பொருளாதார எண்கள் வெறும் கண்துடைப்பாகவே உள்ளன, ஏனெனில் வசதி படைத்தவர்கள் மேலும் முன்னேற, ஏழை எளியவர்கள் மேலும் நலிவடைந்துள்ளனர் என்பதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன. 


 அரசாங்கம் தற்போதைய எரிபொருள் விலை குறைப்பு போன்ற தற்காலிக சலுகைகளைக் காட்டி மக்களை ஏமாற்ற முடியாது. எரிபொருள் விலை குறைந்தாலும், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள விசித்திரமான சூழலே நாட்டில் நிலவுகிறது என்றார்.   


உயர் வருமான அந்தஸ்து கிடைத்தாலும், வறுமை கோட்டில் வாழ்பவர்கள் இருமடங்கு ஹர்ஷ டி சில்வா அதிர்ச்சித் தகவல் இலங்கை மீண்டும் உலக வங்கியினால் 'உயர் நடுத்தர வருமானம் பெறும் நாடு' என்ற அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் நாட்டின் எண்களுக்குப் பின்னால் இருக்கும் கசப்பான உண்மை என்னவெனில், நாட்டில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். உலக வங்கியின் புதிய வகைப்படுத்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,இலங்கையின் மொத்த தேசிய வருமானம் டொலர் கணக்கீட்டில் உலக வங்கியின் வரம்பைத் தாண்டியதன் காரணமாக, நாம் இரண்டாவது முறையாக இந்த நிலையை அடைந்துள்ளோம். இதற்கு முக்கிய காரணம், 2023 மற்றும் 2024 காலப்பகுதியில் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 370 லிருந்து 300 ரூபாவுக்கு வலுவடைந்ததே தவிர, ஒட்டுமொத்த நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி அல்ல.  கடந்த 2019ஆம் ஆண்டில் இலங்கை முதன்முறையாக இந்த உயர் நடுத்தர வருமான நிலையை எட்டியபோது, நாட்டின் மக்கள் தொகையில் வறுமை விகிதம் 11.5 சதவீதமாக மட்டுமே காணப்பட்டது. ஆனால், தற்போது 2025 ஆம் ஆண்டின் இறுதியில் அதே இலக்கை நாம் மீண்டும் தொட்டுள்ள போதிலும், நாட்டின் வறுமை விகிதம் 22.1 சதவீதமாக, அதாவது இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.  அதுமட்டுமன்றி, உலக வங்கியின் உத்தியோகபூர்வ அறிக்கையின் பிரகாரம், 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நாட்டில் போதிய உணவுப் பாதுகாப்பு இல்லாத ஏழை மக்களின் எண்ணிக்கை தற்போது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சியூட்டும் உண்மையும் வெளிவந்துள்ளது.  அரசாங்கத்தைச் சேர்ந்த சிலர் இந்த புதிய வகைப்படுத்தலை ஒரு பெரிய வெற்றியாகக் கொண்டாடி வருகின்ற போதிலும், ஒரு நாட்டின் உண்மையான நிலையான அபிவிருத்தி என்பது ஒரு சிறிய குழுவினரிடம் மட்டும் செல்வம் குவிவதல்ல் மாறாக, நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் அதன் பலன்கள் சென்றடைவதே ஆகும். தற்போதைய பொருளாதார எண்கள் வெறும் கண்துடைப்பாகவே உள்ளன, ஏனெனில் வசதி படைத்தவர்கள் மேலும் முன்னேற, ஏழை எளியவர்கள் மேலும் நலிவடைந்துள்ளனர் என்பதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன.  அரசாங்கம் தற்போதைய எரிபொருள் விலை குறைப்பு போன்ற தற்காலிக சலுகைகளைக் காட்டி மக்களை ஏமாற்ற முடியாது. எரிபொருள் விலை குறைந்தாலும், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள விசித்திரமான சூழலே நாட்டில் நிலவுகிறது என்றார்.   

Advertisement

Advertisement

Advertisement