• Nov 06 2026

இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வந்தும் பலனில்லை; வீடு தீக்கிரை - மக்கள் விசனம்!

Chithra / Nov 5th 2026, 12:03 pm
image


கல்முனை, தைக்கா வீதியில் உள்ள வீடொன்றில் மின்சாரக் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, கல்முனை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவின் அவசரகாலச் செயற்பாடுகள் தொடர்பில் அப்பகுதி மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.


குறித்த தீ விபத்து நேற்று புதன்கிழமை (04) மாலை இடம்பெற்றுள்ளது.


தீ விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, கல்முனை மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளன.


எனினும், ஒரு தீயணைப்பு வாகனத்திலிருந்து மற்றைய வாகனத்திற்கு நீரை நிரப்பும் நடவடிக்கை தாமதமாக இடம்பெற்ற பின்னரே தீயணைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


இதனால், தீயணைப்பு வாகனங்கள் நீரை நிரப்பித் தயார் நிலைக்கு வருவதற்குள் குறித்த வீடு முழுமையாகத் தீக்கிரையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.


இந்தச் சம்பவம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள அப்பகுதி மக்கள், அவசரகால நடவடிக்கைகளில் ஒவ்வொரு நிமிடமும் பெறுமதியானது எனச் சுட்டிக்காட்டியுள்ளனர்.


உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டிய அவசர சேவையில் நீர்த் தட்டுப்பாடு மற்றும் செயற்பாட்டுத் தாமதங்கள் ஏற்படுவது பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குவதாகவும் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


மேலும், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் இருக்க தீயணைப்புப் பிரிவின் அவசரகாலச் செயற்பாடுகள் மற்றும் தயார் நிலைமை தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வந்தும் பலனில்லை; வீடு தீக்கிரை - மக்கள் விசனம் கல்முனை, தைக்கா வீதியில் உள்ள வீடொன்றில் மின்சாரக் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, கல்முனை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவின் அவசரகாலச் செயற்பாடுகள் தொடர்பில் அப்பகுதி மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.குறித்த தீ விபத்து நேற்று புதன்கிழமை (04) மாலை இடம்பெற்றுள்ளது.தீ விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, கல்முனை மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளன.எனினும், ஒரு தீயணைப்பு வாகனத்திலிருந்து மற்றைய வாகனத்திற்கு நீரை நிரப்பும் நடவடிக்கை தாமதமாக இடம்பெற்ற பின்னரே தீயணைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இதனால், தீயணைப்பு வாகனங்கள் நீரை நிரப்பித் தயார் நிலைக்கு வருவதற்குள் குறித்த வீடு முழுமையாகத் தீக்கிரையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.இந்தச் சம்பவம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள அப்பகுதி மக்கள், அவசரகால நடவடிக்கைகளில் ஒவ்வொரு நிமிடமும் பெறுமதியானது எனச் சுட்டிக்காட்டியுள்ளனர்.உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டிய அவசர சேவையில் நீர்த் தட்டுப்பாடு மற்றும் செயற்பாட்டுத் தாமதங்கள் ஏற்படுவது பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குவதாகவும் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.மேலும், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் இருக்க தீயணைப்புப் பிரிவின் அவசரகாலச் செயற்பாடுகள் மற்றும் தயார் நிலைமை தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement