தமிழீழ விடுதலைப் புலிகள் உள்நாட்டு யுத்தத்தின் போது 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கியை தீயிட்டு கொழுத்திய போது கூட, நாடளாவிய ரீதியில் மின்துண்டிக்கப்படவில்லை. அவ்வாறிக்கையில் குரங்கின் மீது பழி சுமத்தி குரங்கு சேட்டைகள் காண்பிக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.
ஞாயிறன்று ஏற்பட்ட மின்தடைக்கு மின்சக்தி அமைச்சர் குரங்குகள் மீது பழி சுமத்தினார். 33,000 மெகாவோல்ட் கொண்ட மின் பிறப்பாக்கி விடுதலைப் புலிகளால் தீ வைக்கப்பட்ட போது கூட இவ்வாறு தேசியளவில் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை.
அவ்வாறிருக்கையில் ஒரு குரங்கால் முழு நாட்டுக்கும் மின் துண்டிப்பை ஏற்படுத்த முடியுமா?
கடந்த அரசாங்கங்களின் குறைக் கூறியே இவர்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். தற்போது ஆட்சியிலிருந்து கொண்டும் இதனையே கூறுகின்றனர்.
நுரைச்சோலை நிலக்கரி மின்உற்பத்தி நிலையத்திலுள்ள மின் பிறப்பாக்கிகள் செயலிழந்தமையால் இந்நிலைமை ஏற்பட்டது எனக் கூறினர்.
கடந்த காலங்களில் நுரைச்சோலை மின் பிறப்பாக்கிகள் செயலிழந்த சந்தர்ப்பங்களில், அது தொழிற்சங்க மாபியாக்களின் செயல் என விமர்சித்தனர்.
அவ்வாறெனில் இந்த அரசாங்கத்துக்கும் அந்த மாபியாக்களை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதா? இந்த மாபியாக்களின் தேவைக்கேற்ப செயற்படுவதற்கு அரசாங்கம் இணங்கியுள்ளதா?
நுரைச்சோலை மின்பிறப்பாக்கிகள் செயலிழக்கப் போவதை அறிந்தே அரசாங்கம் அதற்கு இடமளித்திருக்கிறது. இந்த உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். என்றார்.
புலிகளால் 33000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி தீக்கிரையாக்கப்பட்டபோது கூட மின்துண்டிக்கப்படவில்லை எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் உள்நாட்டு யுத்தத்தின் போது 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கியை தீயிட்டு கொழுத்திய போது கூட, நாடளாவிய ரீதியில் மின்துண்டிக்கப்படவில்லை. அவ்வாறிக்கையில் குரங்கின் மீது பழி சுமத்தி குரங்கு சேட்டைகள் காண்பிக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார். ஞாயிறன்று ஏற்பட்ட மின்தடைக்கு மின்சக்தி அமைச்சர் குரங்குகள் மீது பழி சுமத்தினார். 33,000 மெகாவோல்ட் கொண்ட மின் பிறப்பாக்கி விடுதலைப் புலிகளால் தீ வைக்கப்பட்ட போது கூட இவ்வாறு தேசியளவில் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை. அவ்வாறிருக்கையில் ஒரு குரங்கால் முழு நாட்டுக்கும் மின் துண்டிப்பை ஏற்படுத்த முடியுமாகடந்த அரசாங்கங்களின் குறைக் கூறியே இவர்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். தற்போது ஆட்சியிலிருந்து கொண்டும் இதனையே கூறுகின்றனர். நுரைச்சோலை நிலக்கரி மின்உற்பத்தி நிலையத்திலுள்ள மின் பிறப்பாக்கிகள் செயலிழந்தமையால் இந்நிலைமை ஏற்பட்டது எனக் கூறினர். கடந்த காலங்களில் நுரைச்சோலை மின் பிறப்பாக்கிகள் செயலிழந்த சந்தர்ப்பங்களில், அது தொழிற்சங்க மாபியாக்களின் செயல் என விமர்சித்தனர். அவ்வாறெனில் இந்த அரசாங்கத்துக்கும் அந்த மாபியாக்களை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதா இந்த மாபியாக்களின் தேவைக்கேற்ப செயற்படுவதற்கு அரசாங்கம் இணங்கியுள்ளதா நுரைச்சோலை மின்பிறப்பாக்கிகள் செயலிழக்கப் போவதை அறிந்தே அரசாங்கம் அதற்கு இடமளித்திருக்கிறது. இந்த உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். என்றார்.