இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு நிலையான, கௌரவமான உரிமைகளுடன் கூடிய நிலையான அரசியல் தீர்வு வேண்டி வடக்கு கிழக்கின் பல சிவில் அமைப்புக்கள் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் கடந்த ஐம்பது ஆண்டுகளிற்கும் மேலாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.
தமிழ் பேசும் மக்களான நாங்கள் இலங்கை அரச இனவாத அடக்கு முறையில் இருந்து விடுபட்டு நிம்மதியான, இயல்பான எமது அடையாளங்களுடன் வாழ்வதற்காகவே நிலையான அரசியல் தீர்வு எமக்கு முக்கியமாகின்றது.
அந்தவகையில் வடக்கு கிழக்கு மக்களுக்கு நிலையான அரசியல் தீர்வாக எமது சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தத்தக்கவகையில் மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான தீர்வையே நாம் திடமாக வலியுறுத்துகின்றோம், இத்தீர்வினையே தமிழ் பேசும் சிவில் அமைப்புக்களும், வடக்கு கிழக்கு தமிழ்; கட்சிகளும் தமிழினப் பிரச்சனைக்கான தீர்விற்காக இயங்கும் அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி நிற்கின்றார்கள்.
ஆகையால் எதிர்வரும் 14 ஆம் திகதி கார்த்திகை மாதம் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வாழுகின்ற தமிழ் பேசும் மக்களாகிய நாங்கள் எமது இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காகவும் 76 வருட தேசிய இனப்பிரச்சினைகக்கான மேற்கூறிய நிலையான அரசியல்; தீர்வினைத் தொடர்ச்சியாக இலங்கை தேசத்திலும் சர்வதேசத்திலும் வலியுறுத்தக் கூடிய வடகிழக்கில் உள்ள கட்சிகளை ஆதரிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.
அன்பார்ந்த தமிழ் பேசும் மக்களே
காலங்காலமாக சிங்கள பேரினவாத அரசினால் நாம் திட்டமிட்ட வகையில் பிரித்தாளப்பட்டு இருப்பதனால் இத்தேர்தல் களத்தினில் எமது தமிழ் பேசும் கட்சிகள் தனித்தனியாகவும் போட்டி போடுகின்றன. என்றாலுங்கூட, இப்பொதுத் தேர்தலானது எமது தீர்வை வலியுறுத்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் எமது இருப்பை தக்க வைக்கும் வகையிலான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் தேர்தலாகவும் இருப்பதனால் நாம் தமிழ் தேசியப் பரப்பிலுள்ள மேற்கூறிய தீர்வை வலியுறுத்திவரும் தமிழ்க் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு விருப்பு வெறுப்பின்றி வாக்களிக்க வேண்டும் எனக் கோரி நிற்கிறோம்- என்றுள்ளது.
நமது வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் தமிழ் பேசும் மக்களின் இருப்பினை உறுதிப்படுத்த அனைவரும் வாக்களிப்பது அவசியம் - சிவில் வலயமைப்புக்கள் இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு நிலையான, கௌரவமான உரிமைகளுடன் கூடிய நிலையான அரசியல் தீர்வு வேண்டி வடக்கு கிழக்கின் பல சிவில் அமைப்புக்கள் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் கடந்த ஐம்பது ஆண்டுகளிற்கும் மேலாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. தமிழ் பேசும் மக்களான நாங்கள் இலங்கை அரச இனவாத அடக்கு முறையில் இருந்து விடுபட்டு நிம்மதியான, இயல்பான எமது அடையாளங்களுடன் வாழ்வதற்காகவே நிலையான அரசியல் தீர்வு எமக்கு முக்கியமாகின்றது.அந்தவகையில் வடக்கு கிழக்கு மக்களுக்கு நிலையான அரசியல் தீர்வாக எமது சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தத்தக்கவகையில் மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான தீர்வையே நாம் திடமாக வலியுறுத்துகின்றோம், இத்தீர்வினையே தமிழ் பேசும் சிவில் அமைப்புக்களும், வடக்கு கிழக்கு தமிழ்; கட்சிகளும் தமிழினப் பிரச்சனைக்கான தீர்விற்காக இயங்கும் அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி நிற்கின்றார்கள்.ஆகையால் எதிர்வரும் 14 ஆம் திகதி கார்த்திகை மாதம் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வாழுகின்ற தமிழ் பேசும் மக்களாகிய நாங்கள் எமது இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காகவும் 76 வருட தேசிய இனப்பிரச்சினைகக்கான மேற்கூறிய நிலையான அரசியல்; தீர்வினைத் தொடர்ச்சியாக இலங்கை தேசத்திலும் சர்வதேசத்திலும் வலியுறுத்தக் கூடிய வடகிழக்கில் உள்ள கட்சிகளை ஆதரிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.அன்பார்ந்த தமிழ் பேசும் மக்களேகாலங்காலமாக சிங்கள பேரினவாத அரசினால் நாம் திட்டமிட்ட வகையில் பிரித்தாளப்பட்டு இருப்பதனால் இத்தேர்தல் களத்தினில் எமது தமிழ் பேசும் கட்சிகள் தனித்தனியாகவும் போட்டி போடுகின்றன. என்றாலுங்கூட, இப்பொதுத் தேர்தலானது எமது தீர்வை வலியுறுத்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் எமது இருப்பை தக்க வைக்கும் வகையிலான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் தேர்தலாகவும் இருப்பதனால் நாம் தமிழ் தேசியப் பரப்பிலுள்ள மேற்கூறிய தீர்வை வலியுறுத்திவரும் தமிழ்க் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு விருப்பு வெறுப்பின்றி வாக்களிக்க வேண்டும் எனக் கோரி நிற்கிறோம்- என்றுள்ளது.