• Nov 09 2024

மட்டக்களப்பில் பொதுத்தேர்தலின் முக்கியத்துவம், தமிழ் பேசும் மக்களின் இருப்பு தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல்!

Tamil nila / Nov 8th 2024, 9:46 pm
image

வாக்களிக்கும் உரிமையும், பொதுத்தேர்தலின் முக்கியத்துவம், தமிழ் பேசும் மக்களின் இருப்பு தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டுவரும் பிரதேச சிவில் வலையமைப்புகள் மற்றும் இளைஞர்களை ஒன்றிணைந்து நடாத்தப்பட்டது



இலங்கையில் எதிர்வரும் 14.11.2024 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்களிக்கும் உரிமை,  தேர்தலின் முக்கியத்துவம் மற்றும் தமிழ் பேசும் மக்களின் இருப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் கலந்துரையாடலை மட்டக்களப்பு மாவட்ட த்தில் AHRC நிறுவனத்தினால் உருவாக்கி செயற்பட்டு  வரும் பிரதேச சிவில் அமைப்புகள் மற்றும் மாற்றத்துக்கான இளைஞர் வலையமைப்பு உறுப்பினர்களுக்கு தெளிவினை ஏற்படுத்தும் குறித்து கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டு நடத்தப்பட்டது 

வடக்கு கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வினை காணும் வகையில் நிலையான அரசியல் தீர்வான சமஸ்டி தீர்வினை வலியுறுத்தி நிற்கும் கட்சிகளுக்கு தமிழ் பேசும் மக்களின் வாக்கினை செலுத்த கோரிய சிவில் வலையமைப்புகளின் கோரிக்கைக்கான தெளிவினை ஏற்படுத்தும் விழிப்புணர்வு கலந்துரையாடலாக இக் கலந்துரையாடல் அமையப்பெற்றது.


இதன் போது வளவாளராக மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய இணைப்பாளர் A.L இசைடீன்  AHRC நிறுவனத்தின் இணைப்பாளர் .க. லவகுசராசா, பிரதி இணைப்பாளர் .அ.மதன் மற்றும் திட்ட முகாமையாளர் . நா. மிரேகா ஆகியோர் கலந்து கொண்டனர் 


கலந்துரையாடலில் தமிழ் கட்சிகளின் பிளவு தொடர்பாகவும் எதிர்காலத்தில் ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளை உருவாக்குவதற்கான மக்களின் பங்களிப்பு பற்றியும் மக்கள் பல கருத்துக்களை முன்வைத்தனர் 


இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 115 பிரதிநிதிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது

மட்டக்களப்பில் பொதுத்தேர்தலின் முக்கியத்துவம், தமிழ் பேசும் மக்களின் இருப்பு தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் வாக்களிக்கும் உரிமையும், பொதுத்தேர்தலின் முக்கியத்துவம், தமிழ் பேசும் மக்களின் இருப்பு தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டுவரும் பிரதேச சிவில் வலையமைப்புகள் மற்றும் இளைஞர்களை ஒன்றிணைந்து நடாத்தப்பட்டதுஇலங்கையில் எதிர்வரும் 14.11.2024 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்களிக்கும் உரிமை,  தேர்தலின் முக்கியத்துவம் மற்றும் தமிழ் பேசும் மக்களின் இருப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் கலந்துரையாடலை மட்டக்களப்பு மாவட்ட த்தில் AHRC நிறுவனத்தினால் உருவாக்கி செயற்பட்டு  வரும் பிரதேச சிவில் அமைப்புகள் மற்றும் மாற்றத்துக்கான இளைஞர் வலையமைப்பு உறுப்பினர்களுக்கு தெளிவினை ஏற்படுத்தும் குறித்து கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டு நடத்தப்பட்டது வடக்கு கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வினை காணும் வகையில் நிலையான அரசியல் தீர்வான சமஸ்டி தீர்வினை வலியுறுத்தி நிற்கும் கட்சிகளுக்கு தமிழ் பேசும் மக்களின் வாக்கினை செலுத்த கோரிய சிவில் வலையமைப்புகளின் கோரிக்கைக்கான தெளிவினை ஏற்படுத்தும் விழிப்புணர்வு கலந்துரையாடலாக இக் கலந்துரையாடல் அமையப்பெற்றது.இதன் போது வளவாளராக மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய இணைப்பாளர் A.L இசைடீன்  AHRC நிறுவனத்தின் இணைப்பாளர் .க. லவகுசராசா, பிரதி இணைப்பாளர் .அ.மதன் மற்றும் திட்ட முகாமையாளர் . நா. மிரேகா ஆகியோர் கலந்து கொண்டனர் கலந்துரையாடலில் தமிழ் கட்சிகளின் பிளவு தொடர்பாகவும் எதிர்காலத்தில் ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளை உருவாக்குவதற்கான மக்களின் பங்களிப்பு பற்றியும் மக்கள் பல கருத்துக்களை முன்வைத்தனர் இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 115 பிரதிநிதிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement