முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, தம்மைப் பற்றி போலியான தகவல்களை பரப்பியதாகக் கூறி, யூடியூப் அலைவரிசைக்கு எதிராக நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முறைப்பாடு செய்துள்ளார்.
சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட தனிநபரால் நடத்தப்படும் யூடியூப் அலைவரிசை தனக்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டுகளை சுமத்தி தனது தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டதாக மனுதாரர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் தெரிவித்தார்.
இந்த முறைப்பாட்டில், யூடியூப்பின் தாய் நிறுவனமான கூகுள் நிறுவனத்தை பிரதிவாதியாக அவர் பெயரிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட V8 லேண்ட் க்ரூசர் வாகனத்தை சுஜீவ சேனசிங்க வைத்திருந்ததாகவும் பயன்படுத்தியதாகவும் யூடியூப் சேனல் குற்றம் சாட்டியுள்ளது.
இதே அலைவரிசையின் ஏனைய செய்திகள், முன்னாள் எம்.பி.யை விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி மேலும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
இது பொய்யானது மற்றும் அவதூறானது என்று சேனசிங்க குறிப்பிட்டார்.
தவறான தகவல்களுக்கு எதிராக ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தவும், அத்தகைய பொய்யான குற்றச்சாட்டுக்களில் இருந்து தனிநபர்களைப் பாதுகாக்கவும் சட்ட நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
யூடியூப் அலைவரிசைக்கு எதிராக நீதிமன்றை நாடிய முன்னாள் எம்.பி. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, தம்மைப் பற்றி போலியான தகவல்களை பரப்பியதாகக் கூறி, யூடியூப் அலைவரிசைக்கு எதிராக நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முறைப்பாடு செய்துள்ளார்.சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட தனிநபரால் நடத்தப்படும் யூடியூப் அலைவரிசை தனக்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டுகளை சுமத்தி தனது தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டதாக மனுதாரர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் தெரிவித்தார்.இந்த முறைப்பாட்டில், யூடியூப்பின் தாய் நிறுவனமான கூகுள் நிறுவனத்தை பிரதிவாதியாக அவர் பெயரிட்டுள்ளார்.சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட V8 லேண்ட் க்ரூசர் வாகனத்தை சுஜீவ சேனசிங்க வைத்திருந்ததாகவும் பயன்படுத்தியதாகவும் யூடியூப் சேனல் குற்றம் சாட்டியுள்ளது.இதே அலைவரிசையின் ஏனைய செய்திகள், முன்னாள் எம்.பி.யை விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி மேலும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.இது பொய்யானது மற்றும் அவதூறானது என்று சேனசிங்க குறிப்பிட்டார்.தவறான தகவல்களுக்கு எதிராக ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தவும், அத்தகைய பொய்யான குற்றச்சாட்டுக்களில் இருந்து தனிநபர்களைப் பாதுகாக்கவும் சட்ட நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.