• Nov 24 2024

ஜனாதிபதியை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்..!

Chithra / Jun 20th 2024, 12:37 pm
image

 

நாட்டை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று   சந்தித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று காலை நாட்டை வந்தடைந்தார்.

இதன்போது கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவரை, இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் ஜெய்சங்கர் உள்ளிட்ட குமுவினரை வரவேற்றனர்.

ஜெய்சங்கரின் இலங்கை விஜயத்தின்போது, ​​இந்திய - இலங்கை உறவுகளில் மூன்று மைல்கற்கள் எட்டப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 106 வீடுகளுக்கான நினைவுப் படிகங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜெய்சங்கர் கூட்டாக இணைந்து ஊடாக திறந்துவைத்தனர்.

அத்துடன், கொழும்பு, திருகோணமலை ஆகிய நகர்களிலுள்ள மாதிரிக் கிராமத்திலும் 24 வீடுகள் மெய்நிகர் ஊடாக பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் புதிய அரசாங்கம் அமைந்த பிறகு ஜெய்சங்கரின் முதல் விஜயம் இதுவாகும். 

ஜனாதிபதியை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்.  நாட்டை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று   சந்தித்துள்ளார்.இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று காலை நாட்டை வந்தடைந்தார்.இதன்போது கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவரை, இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் ஜெய்சங்கர் உள்ளிட்ட குமுவினரை வரவேற்றனர்.ஜெய்சங்கரின் இலங்கை விஜயத்தின்போது, ​​இந்திய - இலங்கை உறவுகளில் மூன்று மைல்கற்கள் எட்டப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 106 வீடுகளுக்கான நினைவுப் படிகங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜெய்சங்கர் கூட்டாக இணைந்து ஊடாக திறந்துவைத்தனர்.அத்துடன், கொழும்பு, திருகோணமலை ஆகிய நகர்களிலுள்ள மாதிரிக் கிராமத்திலும் 24 வீடுகள் மெய்நிகர் ஊடாக பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டனஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் புதிய அரசாங்கம் அமைந்த பிறகு ஜெய்சங்கரின் முதல் விஜயம் இதுவாகும். 

Advertisement

Advertisement

Advertisement