• Nov 23 2024

அரச ஆயுர்வேத வைத்தியர்களுக்கும் மேலதிக சேவை கொடுப்பனவு!

Tamil nila / Aug 7th 2024, 7:28 pm
image

இதுவரை மேலைத்தேய வைத்தியர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டு வந்த மேலதிக சேவை கொடுப்பனவை, அரச ஆயுர்வேத வைத்தியர்களுக்கும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.

18 வருடங்களுக்கும் மேலாக ஆயுர்வேத வைத்தியர்கள் பல சந்தர்ப்பங்களில் அந்தக் கோரிக்கையை முன்வைத்து வந்ததை நினைவுகூர்ந்த இராஜாங்க அமைச்சர், அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற அனுமதியளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி இதனைத் தெரிவித்தார்.

இந்த கொடுப்பனவு நிதி அமைச்சுக்கு சுமையாக இருக்காமல் இருப்பதற்காக சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் வழங்கப்படும். இது அரசாங்கத்தின் ஆயுர்வேத வைத்தியர்களுக்குக் கிடைத்த வெற்றி என குறிப்பிடலாம்.

கடந்த ஜூலை 31 ஆம் திகதி முதல் பாரம்பரிய வைத்தியர்களைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது தொடர்பான 712 விண்ணப்பங்கள் இதுவரை பெறப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

மேலும் பாரம்பரிய வைத்தியர்களின் பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால், அடுத்த சில வாரங்களில் இவர்களுக்கான பரீட்சை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளன.” என்றும் சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.

அரச ஆயுர்வேத வைத்தியர்களுக்கும் மேலதிக சேவை கொடுப்பனவு இதுவரை மேலைத்தேய வைத்தியர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டு வந்த மேலதிக சேவை கொடுப்பனவை, அரச ஆயுர்வேத வைத்தியர்களுக்கும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.18 வருடங்களுக்கும் மேலாக ஆயுர்வேத வைத்தியர்கள் பல சந்தர்ப்பங்களில் அந்தக் கோரிக்கையை முன்வைத்து வந்ததை நினைவுகூர்ந்த இராஜாங்க அமைச்சர், அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற அனுமதியளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி இதனைத் தெரிவித்தார்.இந்த கொடுப்பனவு நிதி அமைச்சுக்கு சுமையாக இருக்காமல் இருப்பதற்காக சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் வழங்கப்படும். இது அரசாங்கத்தின் ஆயுர்வேத வைத்தியர்களுக்குக் கிடைத்த வெற்றி என குறிப்பிடலாம்.கடந்த ஜூலை 31 ஆம் திகதி முதல் பாரம்பரிய வைத்தியர்களைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது தொடர்பான 712 விண்ணப்பங்கள் இதுவரை பெறப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.மேலும் பாரம்பரிய வைத்தியர்களின் பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால், அடுத்த சில வாரங்களில் இவர்களுக்கான பரீட்சை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளன.” என்றும் சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement