• Nov 19 2024

மார்ச் நடுப்பகுதி வரை நீடிக்கும் கடும் வெப்பம் - மக்களுக்கு எச்சரிக்கை..!samugammedia

mathuri / Feb 27th 2024, 10:33 pm
image

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை உள்ளிட்ட பல மாவட்டங்களில், தற்போது நிலவும் கடும் வெப்பம், மார்ச் மாத நடுப்பகுதி வரை நீடிக்கும் என, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த வெப்பம் காரணமாக, நாட்டின் சில பகுதிகளில், நீரோடைகள் மற்றும் கிணறுகளின் நீர் மட்டம் குறைந்துள்ளதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் நாளை (28) கடும் வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மனித உடலால் அதிகமாக உணரக்கூடிய வெப்பநிலை நாளை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு மற்றும் அவை உணரக்கூடிய இடங்கள் பற்றிய படமும் வளிமண்டவியல் திணைக்களத்தால்  வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் நடுப்பகுதி வரை நீடிக்கும் கடும் வெப்பம் - மக்களுக்கு எச்சரிக்கை.samugammedia கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை உள்ளிட்ட பல மாவட்டங்களில், தற்போது நிலவும் கடும் வெப்பம், மார்ச் மாத நடுப்பகுதி வரை நீடிக்கும் என, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இந்த வெப்பம் காரணமாக, நாட்டின் சில பகுதிகளில், நீரோடைகள் மற்றும் கிணறுகளின் நீர் மட்டம் குறைந்துள்ளதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, நாட்டில் நாளை (28) கடும் வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மனித உடலால் அதிகமாக உணரக்கூடிய வெப்பநிலை நாளை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு மற்றும் அவை உணரக்கூடிய இடங்கள் பற்றிய படமும் வளிமண்டவியல் திணைக்களத்தால்  வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement