• Apr 15 2026

நாட்டின் பல பகுதிகளில் இன்று சீரான வானிலை

Aathira / Jan 28th 2026, 8:10 am
image

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மத்திய மலைப் பிராந்தியத்தின் கிழக்கு சரிவுகள், வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், ஊவா மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மணித்தியாலத்திற்கு 30–40 கிமீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். 

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும், காலி, மாத்தறை, அனுராதபுரம் மாவட்டங்களிலும் அதிகாலை பனிமூட்டம் காணப்படும்.

நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்களிலும் சீரான வானிலை காணப்படும்.

கடல் பிராந்தியங்களில் வடகிழக்குத் திசையிலிருந்து 30–40 கிமீ வேகத்தில் காற்று வீசும். 

களுத்துறை தொடக்கம் கொழும்பு, புத்தளம் ஊடாக மன்னார் வரையான அத்துடன் மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள்  கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டின் பல பகுதிகளில் இன்று சீரான வானிலை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைப் பிராந்தியத்தின் கிழக்கு சரிவுகள், வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், ஊவா மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மணித்தியாலத்திற்கு 30–40 கிமீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும், காலி, மாத்தறை, அனுராதபுரம் மாவட்டங்களிலும் அதிகாலை பனிமூட்டம் காணப்படும்.நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்களிலும் சீரான வானிலை காணப்படும்.கடல் பிராந்தியங்களில் வடகிழக்குத் திசையிலிருந்து 30–40 கிமீ வேகத்தில் காற்று வீசும். களுத்துறை தொடக்கம் கொழும்பு, புத்தளம் ஊடாக மன்னார் வரையான அத்துடன் மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள்  கொந்தளிப்பாகக் காணப்படும்.

Advertisement

Advertisement

Advertisement