• Dec 03 2024

பொது வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த போலி வைத்தியர் கைது..!

Chithra / Nov 21st 2024, 8:43 am
image

 

மாத்தளை பொது வைத்தியசாலையில் வைத்தியர் என்ற போர்வையில் செயற்பட்ட போலி வைத்தியர் ஒருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி - இறக்குவானை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் இரண்டு வாரங்களாக வைத்தியர் போலக் கடமையாற்றி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபரின் நடவடிக்கைகளில் சந்தேகம் எழுந்தமையினால் சக வைத்தியர்களினால் பொலிஸாரிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.


பொது வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த போலி வைத்தியர் கைது.  மாத்தளை பொது வைத்தியசாலையில் வைத்தியர் என்ற போர்வையில் செயற்பட்ட போலி வைத்தியர் ஒருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.இரத்தினபுரி - இறக்குவானை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேகநபர் இரண்டு வாரங்களாக வைத்தியர் போலக் கடமையாற்றி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.சந்தேக நபரின் நடவடிக்கைகளில் சந்தேகம் எழுந்தமையினால் சக வைத்தியர்களினால் பொலிஸாரிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement