இலங்கையில் 40,000க்கும் அதிகமானோர் போலி வைத்தியர்களாக செயற்படுவதாக தகவல் வெளிவந்த ஒரு வாரத்தில் மீண்டும் அவ்வாறான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பயாகம, பண்டாரவத்தை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வைத்திய நிலையம் ஒன்றை நடத்தி வந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் போலி வைத்தியராகக் காட்டிக்கொண்டு மருத்துவ நிலையத்தை நடத்தி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மருத்துவ மனையை முன்பு நடத்தி வந்த மருத்துவர் கடந்த ஜூலை மாதம் வெளிநாடு சென்றார்.
அதன் பிறகு மருத்துவ மனையை மருத்துவரின் தந்தை நடத்தி வந்தார். சந்தேகநபர் மஹர நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இலங்கையில் அச்சுறுத்தலாக மாறும் போலி வைத்தியர்கள்- பொது மக்களுக்கு எச்சரிக்கை. இலங்கையில் 40,000க்கும் அதிகமானோர் போலி வைத்தியர்களாக செயற்படுவதாக தகவல் வெளிவந்த ஒரு வாரத்தில் மீண்டும் அவ்வாறான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.பயாகம, பண்டாரவத்தை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வைத்திய நிலையம் ஒன்றை நடத்தி வந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சந்தேகநபர் போலி வைத்தியராகக் காட்டிக்கொண்டு மருத்துவ நிலையத்தை நடத்தி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த 2017ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மருத்துவ மனையை முன்பு நடத்தி வந்த மருத்துவர் கடந்த ஜூலை மாதம் வெளிநாடு சென்றார்.அதன் பிறகு மருத்துவ மனையை மருத்துவரின் தந்தை நடத்தி வந்தார். சந்தேகநபர் மஹர நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.