• Mar 12 2025

குடும்பத் தகராறு; மகளையும், மனைவியையும் குத்திக் காயப்படுத்திய பின் உயிர்மாய்த்த தந்தை

Chithra / Mar 12th 2025, 12:41 pm
image

 

பதுளை - மடுல்சீமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ரொபெரிய பகுதியில் கத்திக்குத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

தந்தை ஒருவர் தனது மகளையும், மனைவியையும் கத்தியால் குத்திக் காயப்படுத்திய பின் தனது உயிரையும் மாய்த்துக் கொண்டுள்ளார். 

சம்பவத்தில் உயிரிழந்தவர் ரொபெரிய பகுதியில் வசிக்கும் 50 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த இருவரும் நேற்று இரவு ரொபெரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


குடும்பத் தகராறு; மகளையும், மனைவியையும் குத்திக் காயப்படுத்திய பின் உயிர்மாய்த்த தந்தை  பதுளை - மடுல்சீமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ரொபெரிய பகுதியில் கத்திக்குத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தந்தை ஒருவர் தனது மகளையும், மனைவியையும் கத்தியால் குத்திக் காயப்படுத்திய பின் தனது உயிரையும் மாய்த்துக் கொண்டுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் ரொபெரிய பகுதியில் வசிக்கும் 50 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.படுகாயமடைந்த இருவரும் நேற்று இரவு ரொபெரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement