• Nov 28 2024

மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் மரணம்- வீட்டின் உரிமையாளரை கைது செய்ய உத்தரவு!

Tamil nila / Oct 26th 2024, 6:23 pm
image

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானில் மின்சாரம் தாக்கிக் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்த சம்பவத்தில் வீட்டின் உரிமையாளரை உடன் கைது செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

ஒட்டுசுட்டானில் வீடொன்றுக்கு முன்பாகத் தேர்தல் சுவரொட்டி ஒட்டிய சமயம்  மின்சாரம் தாக்கி  மரணமடைந்த சம்பவம் தொடர்பிலேயே வீட்டின் உரிமையாளரைக்  கைது செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

ஒட்டுசுட்டான், முத்து விநாயகபுரம் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களின் விளம்பர சுவரொட்டிகளைக் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு  ஒட்டியபோது வீட்டின் முன்பாக அமைத்திருந்த யானை வேலியின் மின்சாரம் தாக்கியுள்ளது.

மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும்  உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் ஆராய சம்பவ இடத்துக்குச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் வீதியோரம் அமைக்கப்பட்டிருந்த யானை வேலியைப் பார்வையிட்ட பின்னர் வீட்டின் உரிமையாளரைக்  கைது செய்து வழக்குப் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.


மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் மரணம்- வீட்டின் உரிமையாளரை கைது செய்ய உத்தரவு முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானில் மின்சாரம் தாக்கிக் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்த சம்பவத்தில் வீட்டின் உரிமையாளரை உடன் கைது செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.ஒட்டுசுட்டானில் வீடொன்றுக்கு முன்பாகத் தேர்தல் சுவரொட்டி ஒட்டிய சமயம்  மின்சாரம் தாக்கி  மரணமடைந்த சம்பவம் தொடர்பிலேயே வீட்டின் உரிமையாளரைக்  கைது செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.ஒட்டுசுட்டான், முத்து விநாயகபுரம் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களின் விளம்பர சுவரொட்டிகளைக் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு  ஒட்டியபோது வீட்டின் முன்பாக அமைத்திருந்த யானை வேலியின் மின்சாரம் தாக்கியுள்ளது.மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும்  உயிரிழந்துள்ளார்.இந்த மரணம் தொடர்பில் ஆராய சம்பவ இடத்துக்குச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் வீதியோரம் அமைக்கப்பட்டிருந்த யானை வேலியைப் பார்வையிட்ட பின்னர் வீட்டின் உரிமையாளரைக்  கைது செய்து வழக்குப் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement