• Nov 23 2024

காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் மரணம்

Chithra / Aug 20th 2024, 3:44 pm
image

 

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர்பிரிவுட்பட்ட பொண்டுகள் சேனை பிரதான வீதியில்   காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர்  ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

கிரான் புலிப்பாய்ந்தகல் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய தம்பிபிள்ளை அம்பிகை ராசா என்ற மூன்று பிள்ளைகளின்  தந்தையே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் புலிபாய்ந்தகல் பகுதியிலுள்ள தனது வீட்டில் இருந்து பூலாக்காடு பகுதியில் உள்ள கோயில் ஒன்றுக்கு நேற்று அதிகாலை துவிச்சக்கர வண்டிலில் சென்ற வேளை, பனை மரத்தின் மறைவில் நின்ற காட்டு யானை தாக்கியபோதே அவ்விடத்திலேயே உயிர் இழந்துள்ளார்.

கோரளைப்பற்று தெற்கு கிரான் பகுதிக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி கே.பவளகேசன் சம்பவ இடத்திற்கு சென்று  சடலத்தை பார்வையிட்டதுடன்,

விசாரணைகளை மேற்கொண்டதுடன்  பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்திசாலைக்கு  சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்று சடலம் மீதான சட்ட வைத்திய பரிசோதனை நிறைவடைந்த பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிப்பதற்கான  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் இம் மாதம்  2 குடும்பஸ்த்தர்கள் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது


காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் மரணம்  மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர்பிரிவுட்பட்ட பொண்டுகள் சேனை பிரதான வீதியில்   காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர்  ஒருவர்  உயிரிழந்துள்ளார்.கிரான் புலிப்பாய்ந்தகல் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய தம்பிபிள்ளை அம்பிகை ராசா என்ற மூன்று பிள்ளைகளின்  தந்தையே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த நபர் புலிபாய்ந்தகல் பகுதியிலுள்ள தனது வீட்டில் இருந்து பூலாக்காடு பகுதியில் உள்ள கோயில் ஒன்றுக்கு நேற்று அதிகாலை துவிச்சக்கர வண்டிலில் சென்ற வேளை, பனை மரத்தின் மறைவில் நின்ற காட்டு யானை தாக்கியபோதே அவ்விடத்திலேயே உயிர் இழந்துள்ளார்.கோரளைப்பற்று தெற்கு கிரான் பகுதிக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி கே.பவளகேசன் சம்பவ இடத்திற்கு சென்று  சடலத்தை பார்வையிட்டதுடன்,விசாரணைகளை மேற்கொண்டதுடன்  பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்திசாலைக்கு  சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இன்று சடலம் மீதான சட்ட வைத்திய பரிசோதனை நிறைவடைந்த பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிப்பதற்கான  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் இம் மாதம்  2 குடும்பஸ்த்தர்கள் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement