யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
49 வயதுடைய சந்திரகுமார் சந்திரபாலன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை பருத்தித்துறை நகர் பகுதியில், மது போதையில் நின்றவேளை, அவருக்கு பிடியாணை உள்ளதாக கூறி வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைக்காக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த நபரின் உடலில் அடிகாயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரின் தாக்குதலாலேயே குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குறித்த நபர் இரவு உயிரிழந்த நிலையில் வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
உடற்கூறு பரிசோதனையில் மேலதிக தகவல்கள் பெற வேண்டியிருந்ததால் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் மரணம் யாழ். வல்வெட்டித்துறையில் பதற்றம் யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 49 வயதுடைய சந்திரகுமார் சந்திரபாலன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,குறித்த நபர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை பருத்தித்துறை நகர் பகுதியில், மது போதையில் நின்றவேளை, அவருக்கு பிடியாணை உள்ளதாக கூறி வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைக்காக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த நபரின் உடலில் அடிகாயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.பொலிஸாரின் தாக்குதலாலேயே குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.குறித்த நபர் இரவு உயிரிழந்த நிலையில் வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.உடற்கூறு பரிசோதனையில் மேலதிக தகவல்கள் பெற வேண்டியிருந்ததால் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.