• May 20 2024

பாராளுமன்றில் பெண் உறுப்பினருக்கு லவ் ப்ரொபோஸ் செய்த பிரபல எம்.பி!SamugamMedia

Sharmi / Mar 9th 2023, 9:50 am
image

Advertisement

ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்றில் உரையாற்றிய எம்.பியொருவர், தன் காதலியான சக எம்.பி.யை, திருமணம் செய்து கொள்ள விருப்ப அழைப்பு விடுத்துள்ள சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த நிகழ்வு குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விக்டோரியா மாகாணத்தை சேர்ந்த தொழிலாளர் கட்சி எம்.பி.யான நாதன் லாம்பர்ட், நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது யாருமே எதிர்பாராத வகையில், தனது காதலியான எம்.பி. நோவா எர்லிச்சை பார்த்து, நாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் என குறிப்பிட்டார்.

மேலும், தற்போது மோதிரம் கொண்டு வரவில்லை என்றும், பின்னிரவில் அதை தருவதாகவும் எம்.பி. அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற அவையில் இருந்த அனைவரும் கரவொலி எழுப்பி எம்.பி.யின் காதலை உற்சாகப்படுத்தினர்.

பாராளுமன்றில் பெண் உறுப்பினருக்கு லவ் ப்ரொபோஸ் செய்த பிரபல எம்.பிSamugamMedia ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்றில் உரையாற்றிய எம்.பியொருவர், தன் காதலியான சக எம்.பி.யை, திருமணம் செய்து கொள்ள விருப்ப அழைப்பு விடுத்துள்ள சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நிகழ்வு குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.விக்டோரியா மாகாணத்தை சேர்ந்த தொழிலாளர் கட்சி எம்.பி.யான நாதன் லாம்பர்ட், நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது யாருமே எதிர்பாராத வகையில், தனது காதலியான எம்.பி. நோவா எர்லிச்சை பார்த்து, நாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் என குறிப்பிட்டார்.மேலும், தற்போது மோதிரம் கொண்டு வரவில்லை என்றும், பின்னிரவில் அதை தருவதாகவும் எம்.பி. அன்பை வெளிப்படுத்தியுள்ளார். நாடாளுமன்ற அவையில் இருந்த அனைவரும் கரவொலி எழுப்பி எம்.பி.யின் காதலை உற்சாகப்படுத்தினர்.

Advertisement

Advertisement

Advertisement