• Feb 01 2025

மூதூரில் தமிழர் பாரம்பரிய கலை அம்சங்களுடன் இடம்பெற்ற உழவர் தின விழா..!

Sharmi / Feb 1st 2025, 5:26 pm
image

மூதூர் -கங்குவேலி அகத்தியர் கலை மாமன்றத்தின் ஏற்பாட்டில் உழவர் தின நிகழ்வு இன்றையதினம்(01) காலை கங்குவேலி கிராமத்தில் இடம்பெற்றது.

இதன்போது மாணவ மாணவிகளின் இன்னிசை நடனங்களுடன் அதிதிகள் விழா மேடைக்கு அழைத்துவரப்பட்டனர்.

இதன்போது பொங்கல் தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் செயலாளர் கு.குணநாதன் கலந்து சிறப்பித்தார்.

ஏனைய அதிதிகளாக மட்டக்களப்பு கல்குடா இந்து குருமார் சங்கத்தினர், மூதூர் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், கங்குவேலி அகத்தியர் கலை மாமன்ற உறுப்பினர்கள் ,கிராம மக்கள் என பலரும்  கலந்து கொண்டமை  குறிப்பிடத்தக்கது.



மூதூரில் தமிழர் பாரம்பரிய கலை அம்சங்களுடன் இடம்பெற்ற உழவர் தின விழா. மூதூர் -கங்குவேலி அகத்தியர் கலை மாமன்றத்தின் ஏற்பாட்டில் உழவர் தின நிகழ்வு இன்றையதினம்(01) காலை கங்குவேலி கிராமத்தில் இடம்பெற்றது.இதன்போது மாணவ மாணவிகளின் இன்னிசை நடனங்களுடன் அதிதிகள் விழா மேடைக்கு அழைத்துவரப்பட்டனர்.இதன்போது பொங்கல் தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் செயலாளர் கு.குணநாதன் கலந்து சிறப்பித்தார்.ஏனைய அதிதிகளாக மட்டக்களப்பு கல்குடா இந்து குருமார் சங்கத்தினர், மூதூர் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், கங்குவேலி அகத்தியர் கலை மாமன்ற உறுப்பினர்கள் ,கிராம மக்கள் என பலரும்  கலந்து கொண்டமை  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement