• May 17 2025

இரண்டு பிள்ளைகளுடன் உயிரை மாய்த்த தந்தை - தீவிர விசாரணையில் பொலிசார்

Thansita / May 17th 2025, 10:04 am
image

ஒடிசா மாநிலம், பரலாகேமுண்டி மாவட்டத்தில் மனைவியின் மரணத்தால் மனமுடைந்த 40 வயது நபர் ஒருவர், தனது இரு குழந்தைகளுக்கு விஷம் கலந்த பிரியாணி கொடுத்து, தானும் அதனை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது

பரலாகேமுண்டி நகரில் உள்ள ஒடியா பரலா வீதியைச் சேர்ந்த இவரின் மனைவி, தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார் 

இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த அவர், தனது 7 மற்றும் 11 வயது பிள்ளைகளை பராமரிக்க முடியாமல்  மனவேதனையில் இருந்ததாக தெரிகிறது. 

இந்நிலையில், குடும்பமாக உயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்கில் விசம் கலந்த பிரியாணியை பிள்ளைகளுக்கும் வழங்கிவிட்டு, தானும் அதனை உட்கொண்டார். 

மயக்க நிலையில் கிடந்த மூவரையும் பார்த்த அயலவர்கள், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். 

பொலிஸார் மூவரையும் மீட்டு, பரலாகேமுண்டி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் சிகிச்ரச பலனின்றி மூவரும் உயிரிழந்துள்ளனர் 

இவர்கள் உட்கொண்ட பிரியாணி மாதிரி,  தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக. பரலாகேமுண்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாந்த் பூபதி தெரிவித்தார். 

மனைவியின் மரணத்தால் ஏற்பட்ட மன அழுத்தத்துடன், சமீபத்தில் தொழிலில் நஷ்டமடைந்ததும் இந்த முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

இந்த சம்பவத்தின் முழு பின்னணியை அறிய, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இரண்டு பிள்ளைகளுடன் உயிரை மாய்த்த தந்தை - தீவிர விசாரணையில் பொலிசார் ஒடிசா மாநிலம், பரலாகேமுண்டி மாவட்டத்தில் மனைவியின் மரணத்தால் மனமுடைந்த 40 வயது நபர் ஒருவர், தனது இரு குழந்தைகளுக்கு விஷம் கலந்த பிரியாணி கொடுத்து, தானும் அதனை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதுபரலாகேமுண்டி நகரில் உள்ள ஒடியா பரலா வீதியைச் சேர்ந்த இவரின் மனைவி, தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார் இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த அவர், தனது 7 மற்றும் 11 வயது பிள்ளைகளை பராமரிக்க முடியாமல்  மனவேதனையில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், குடும்பமாக உயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்கில் விசம் கலந்த பிரியாணியை பிள்ளைகளுக்கும் வழங்கிவிட்டு, தானும் அதனை உட்கொண்டார். மயக்க நிலையில் கிடந்த மூவரையும் பார்த்த அயலவர்கள், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பொலிஸார் மூவரையும் மீட்டு, பரலாகேமுண்டி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் சிகிச்ரச பலனின்றி மூவரும் உயிரிழந்துள்ளனர் இவர்கள் உட்கொண்ட பிரியாணி மாதிரி,  தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக. பரலாகேமுண்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாந்த் பூபதி தெரிவித்தார். மனைவியின் மரணத்தால் ஏற்பட்ட மன அழுத்தத்துடன், சமீபத்தில் தொழிலில் நஷ்டமடைந்ததும் இந்த முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவத்தின் முழு பின்னணியை அறிய, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement