• Oct 31 2024

BREAKING NEWS :- இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்- வெளியானது அறிவிப்பு!

Tamil nila / Oct 31st 2024, 8:45 pm
image

Advertisement

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி 377 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 371 ரூபாவாகும்.

அத்துடன் 319 ரூபாவாக இருந்த லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலையும் 06 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 313 ரூபாவாகும்.

ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

BREAKING NEWS :- இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்- வெளியானது அறிவிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி 377 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 371 ரூபாவாகும்.அத்துடன் 319 ரூபாவாக இருந்த லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலையும் 06 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 313 ரூபாவாகும்.ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement