இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிறுவுனர் தந்தை செல்வாவின் 48வது நினைவு நாளும் நினைவுப் பேருரை நிகழ்வும் இன்றையதினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
தந்தை செல்வா நிலைய அறக்கட்டளை குழுவின் எற்பாட்டில் யாழ். தந்தை செல்வா நினைவிட வளாகத்தில் தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழு ஆயர் கலாநிதி சு.ஜெபநேசன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனும், சிறப்பு அதிதியாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதித்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கலந்துகொண்டு தந்தை செல்வா சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து தந்தை செல்வாவின் நிலைய அறக்கட்டளை குழுவின் உறுப்பினர்கள், சக நண்பர்கள், இலங்கை தமிழரசுக்கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
ஈழத்து தமிழ் பேசும் மக்கள் அரசியலின் தனிகரற்ற தலைவன் தந்தை செல்வா என்னும் தலைப்பில் நினைவு பேருரையினை மொழித்துறை தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் முதுநிலை பேராசிரியர் கலாநிதி றமீம் அப்துல்லா நிகழ்த்தினர்.
தந்தை செல்வாவின் நினைவேந்தல் யாழில் அனுஸ்டிப்பு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிறுவுனர் தந்தை செல்வாவின் 48வது நினைவு நாளும் நினைவுப் பேருரை நிகழ்வும் இன்றையதினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.தந்தை செல்வா நிலைய அறக்கட்டளை குழுவின் எற்பாட்டில் யாழ். தந்தை செல்வா நினைவிட வளாகத்தில் தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழு ஆயர் கலாநிதி சு.ஜெபநேசன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனும், சிறப்பு அதிதியாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதித்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கலந்துகொண்டு தந்தை செல்வா சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.இதனை தொடர்ந்து தந்தை செல்வாவின் நிலைய அறக்கட்டளை குழுவின் உறுப்பினர்கள், சக நண்பர்கள், இலங்கை தமிழரசுக்கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.ஈழத்து தமிழ் பேசும் மக்கள் அரசியலின் தனிகரற்ற தலைவன் தந்தை செல்வா என்னும் தலைப்பில் நினைவு பேருரையினை மொழித்துறை தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் முதுநிலை பேராசிரியர் கலாநிதி றமீம் அப்துல்லா நிகழ்த்தினர்.