யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு வன்முறை செயற்பாடுகள் தொடர்பில் ஆட்களை தெரிந்த போதும் கைது செய்ய முடியவில்லை என யாழ்ப்பாண பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 5 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.
இதன்போது யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் வாள்வெட்டு வன்முறை தொடர்பாக பொலிஸ் தரப்பிடம் வினவப்பட்டது.
ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனை மிரட்டிய வன்முறை கும்பல் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வீட்டிற்கு முன்னால் வாள்களுடன் பயணித்த வன்முறைக் கும்பல் தொடர்பில் ஏன் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என அபிவிருத்திக் குழுவினரால் கேட்கப்பட்டது.
இதற்கு தமிழ் பேசும் யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் எமக்கு அவர்களைத் தெரியும் ஆனால் கைது செய்ய முடியவில்லை என சாதாரணமாக பதில் கூறினார்.
இப்பதிலினால் கோபமடைந்த வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ்,
பொலிஸார் எவ்வாறு இப்படி பொறுப்பற்ற விதத்தில் பதில் கூற முடியும் இவ்வாறான சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முடியாது அவர்கள் இங்கேதான் இருக்க வேண்டும் அவர்களை ஏன் இதுவரை கைது செய்யவில்லை உங்களுக்கு கீழே தான் சைபர் கிரைம் இயங்குகிறது.
அதன் ஊடாக அவர்களை கைது செய்ய முடியும், அல்லது குறித்த சந்தேக நபர் வசிக்கும் கிராம செயலாளரிடம் அவரது விவரங்களை திரட்டி அதன் ஊடாக அவர்களை கைது செய்ய முடியும்.
இவ்வாறு குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு பல்வேறு வழிகள் காணப்படுகின்ற போதிலும் ஏன் பொலிஸாரால் இதுவரை எவரையும் கைது செய்ய முடியவில்லை. 'ஆப்ரேஷன் சக்சஸ் பேசன்ட் டெத்' என்று கூறுவது போல் உள்ளது உங்களது பதில் என குறிப்பிட்டார்.
யாழில் இடம்பெறும் வாள்வெட்டு; ஆட்களை தெரிந்த போதும் கைது செய்ய முடியவில்லை பொலிஸார் தெரிவிப்பு யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு வன்முறை செயற்பாடுகள் தொடர்பில் ஆட்களை தெரிந்த போதும் கைது செய்ய முடியவில்லை என யாழ்ப்பாண பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தெரிவித்தார்.கடந்த 5 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.இதன்போது யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் வாள்வெட்டு வன்முறை தொடர்பாக பொலிஸ் தரப்பிடம் வினவப்பட்டது.ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனை மிரட்டிய வன்முறை கும்பல் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வீட்டிற்கு முன்னால் வாள்களுடன் பயணித்த வன்முறைக் கும்பல் தொடர்பில் ஏன் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என அபிவிருத்திக் குழுவினரால் கேட்கப்பட்டது.இதற்கு தமிழ் பேசும் யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் எமக்கு அவர்களைத் தெரியும் ஆனால் கைது செய்ய முடியவில்லை என சாதாரணமாக பதில் கூறினார்.இப்பதிலினால் கோபமடைந்த வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ், பொலிஸார் எவ்வாறு இப்படி பொறுப்பற்ற விதத்தில் பதில் கூற முடியும் இவ்வாறான சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முடியாது அவர்கள் இங்கேதான் இருக்க வேண்டும் அவர்களை ஏன் இதுவரை கைது செய்யவில்லை உங்களுக்கு கீழே தான் சைபர் கிரைம் இயங்குகிறது.அதன் ஊடாக அவர்களை கைது செய்ய முடியும், அல்லது குறித்த சந்தேக நபர் வசிக்கும் கிராம செயலாளரிடம் அவரது விவரங்களை திரட்டி அதன் ஊடாக அவர்களை கைது செய்ய முடியும். இவ்வாறு குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு பல்வேறு வழிகள் காணப்படுகின்ற போதிலும் ஏன் பொலிஸாரால் இதுவரை எவரையும் கைது செய்ய முடியவில்லை. 'ஆப்ரேஷன் சக்சஸ் பேசன்ட் டெத்' என்று கூறுவது போல் உள்ளது உங்களது பதில் என குறிப்பிட்டார்.