• Mar 12 2025

பெண் வைத்தியர் துஷ்பிரயோகம்; பணிப்புறக்கணிப்பில் குதித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

Chithra / Mar 12th 2025, 7:30 am
image



இன்று 24 மணிநேர பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துக் குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. 

இதன்படிஇன்று காலை 8 மணி முதல் நாடு தழுவிய 24 மணி நேர பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றிய  பெண் வைத்தியர்  பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக  இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற நபர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். சந்தேக நபர் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற  அமர்வில் அமைச்சர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதேவேளை  அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவருக்கு எதிராக நடந்த சம்பவம் தொடர்பாக சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக தற்போது பொலிஸ் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், சந்தேகநபர்களை கைது செய்வதற்காக பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சுக்கு அறிக்கையிடப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து விரைவான விசாரணை நடத்தி, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த முடியும் என அமைச்சு எதிர்பார்க்கின்றது.

அதுவரை அமைதியாக செயல்படவும், விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கவும், சுகாதார அமைச்சு அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

பெண் வைத்தியர் துஷ்பிரயோகம்; பணிப்புறக்கணிப்பில் குதித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று 24 மணிநேர பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துக் குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படிஇன்று காலை 8 மணி முதல் நாடு தழுவிய 24 மணி நேர பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றிய  பெண் வைத்தியர்  பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக  இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற நபர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். சந்தேக நபர் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற  அமர்வில் அமைச்சர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இதேவேளை  அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவருக்கு எதிராக நடந்த சம்பவம் தொடர்பாக சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பாக தற்போது பொலிஸ் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், சந்தேகநபர்களை கைது செய்வதற்காக பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சுக்கு அறிக்கையிடப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து விரைவான விசாரணை நடத்தி, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த முடியும் என அமைச்சு எதிர்பார்க்கின்றது.அதுவரை அமைதியாக செயல்படவும், விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கவும், சுகாதார அமைச்சு அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement