• Nov 25 2024

அமைச்சு பதவிகள் தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் கடும் போட்டி..! பரபரப்பில் கொழும்பு அரசியல்

Chithra / Feb 20th 2024, 9:44 am
image

 

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் அமைச்சு பதவியொன்றை பெற்று விட வேண்டும் என்பதில் ஆளுங்கட்சிக்குள் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் தற்போதையை அமைச்சரவையை மாற்றி புதியவர்கள் சிலரை உள்வாங்குவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  ஆலோசித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த அமைச்சரவை மாற்றத்தின் போது தாமும் அமைச்சு பதவியொன்றை பெற்றுவிட வேண்டும் என்பதில் ஆளுங்கட்சியின் மூத்த அரசியல்வாதிகள் மட்டுமன்றி, 

முதல் தடவையாக நாடாளுமன்றத்துக்கு தெரிவான சிலரும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

எனினும் தற்போதைய நிலையில் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படும் வஜிர அபேவர்த்தன, பௌசி ஆகியோருக்கு மட்டுமே அமைச்சு பதவிகள் குறித்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 

அமைச்சு பதவியொன்றை ஏற்பது தொடர்பில் பௌசி இதுவரை எதுவித தீர்மானங்களையும் தெரிவிக்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. 

அமைச்சு பதவிகள் தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் கடும் போட்டி. பரபரப்பில் கொழும்பு அரசியல்  நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் அமைச்சு பதவியொன்றை பெற்று விட வேண்டும் என்பதில் ஆளுங்கட்சிக்குள் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது.எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் தற்போதையை அமைச்சரவையை மாற்றி புதியவர்கள் சிலரை உள்வாங்குவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  ஆலோசித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் குறித்த அமைச்சரவை மாற்றத்தின் போது தாமும் அமைச்சு பதவியொன்றை பெற்றுவிட வேண்டும் என்பதில் ஆளுங்கட்சியின் மூத்த அரசியல்வாதிகள் மட்டுமன்றி, முதல் தடவையாக நாடாளுமன்றத்துக்கு தெரிவான சிலரும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.எனினும் தற்போதைய நிலையில் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படும் வஜிர அபேவர்த்தன, பௌசி ஆகியோருக்கு மட்டுமே அமைச்சு பதவிகள் குறித்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சு பதவியொன்றை ஏற்பது தொடர்பில் பௌசி இதுவரை எதுவித தீர்மானங்களையும் தெரிவிக்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement