• Apr 25 2026

மார்ச் 10 முதல் இலங்கையில் ஐந்தாவது தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு

Aathira / Mar 6th 2026, 8:35 am
image

இலங்கையில் மக்களின் வாய்வழி சுகாதார நிலையை மதிப்பிடும் நோக்கில் மார்ச் 10 முதல் ஐந்தாவது தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு ஆரம்பமாகவுள்ளது. உலக சுகாதார நிறுவன பரிந்துரையின் படி, ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒருமுறை இந்த கணக்கெடுப்புகள் நடைபெறுகின்றன.

இம்முறை 2026 மார்ச் முதல் நவம்பர் வரை நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ளது. பாடசாலை மாணவர்கள், முதியோர் மற்றும் பல்வேறு வயதினரிடமிருந்து தரவுகள் திரட்டப்படும்.

இந்த கணக்கெடுப்பு எதிர்கால தேசிய வாய்வழி சுகாதாரக் கொள்கைகளை வடிவமைக்கவும், தடுப்பு திட்டங்களை திட்டமிடவும் தேவையான முக்கிய தகவல்களை வழங்கும்.

பொதுமக்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த, சுகாதார அமைச்சின் பல் மருத்துவ சேவைகள் பிரிவு மற்றும் ஊடகப் பிரிவு இணைந்து விசேட கலந்துரையாடல்களை நடத்த உள்ளனர்.


மார்ச் 10 முதல் இலங்கையில் ஐந்தாவது தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு இலங்கையில் மக்களின் வாய்வழி சுகாதார நிலையை மதிப்பிடும் நோக்கில் மார்ச் 10 முதல் ஐந்தாவது தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு ஆரம்பமாகவுள்ளது. உலக சுகாதார நிறுவன பரிந்துரையின் படி, ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒருமுறை இந்த கணக்கெடுப்புகள் நடைபெறுகின்றன.இம்முறை 2026 மார்ச் முதல் நவம்பர் வரை நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ளது. பாடசாலை மாணவர்கள், முதியோர் மற்றும் பல்வேறு வயதினரிடமிருந்து தரவுகள் திரட்டப்படும்.இந்த கணக்கெடுப்பு எதிர்கால தேசிய வாய்வழி சுகாதாரக் கொள்கைகளை வடிவமைக்கவும், தடுப்பு திட்டங்களை திட்டமிடவும் தேவையான முக்கிய தகவல்களை வழங்கும்.பொதுமக்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த, சுகாதார அமைச்சின் பல் மருத்துவ சேவைகள் பிரிவு மற்றும் ஊடகப் பிரிவு இணைந்து விசேட கலந்துரையாடல்களை நடத்த உள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement