• Apr 17 2026

சாய்ந்தமருது கடலில் மூழ்கிய மீன்பிடி படகு

Aathira / Mar 6th 2026, 9:41 am
image

அம்பாறை - சாய்ந்தமருது கடல் பகுதியில், நேற்று வியாழக்கிழமை ( 5) மாலை, இயந்திரங்கள் மற்றும் வலைகள் கொண்ட பாரிய ஆழ்கடல் மீன்பிடி படகு கடலில் மூழ்கியுள்ளது. 

படகை மீட்டு கடற்கரைப் பகுதிக்கு இழுப்பதற்கான முயற்சிகள் பல தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

படகானது நங்கூரமிடப்பட்டிருந்த போதிலும், கடலில் விழுந்து மூழ்கியதால் சுமார் ஒரு கோடிக்கு மேல் பெறுமதியான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் சேதமடைந்துள்ளன. 

படகு கடற்கரைப்பகுதியில் இருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் மூழ்கியுள்ளது.

இப்பகுதியில் கடுமையான கடலரிப்பு ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் மற்றும் பிரதேச குடியிருப்பாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். 

கடலரிப்பால் கடற்கரைப் பகுதிகளில் பயன் தரும் தென்னை மரங்கள் வீழ்ந்து, மீனவர்களுக்கு தங்கள் தோணிகள், படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாத்து வைக்க இடவசதி இல்லாமை பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளது.

பிரதேச மீனவர்கள், கடலரிப்பை தடுக்கும் தடுப்புக் கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், தொடர்ச்சியான கடலரிப்பு காரணமாக எதிர்காலத்தில் கடற்கரை முழுமையாக அழியக் கூடும் என அச்சம் தெரிவித்து வருகின்றனர். 

சாய்ந்தமருது கடலில் மூழ்கிய மீன்பிடி படகு அம்பாறை - சாய்ந்தமருது கடல் பகுதியில், நேற்று வியாழக்கிழமை ( 5) மாலை, இயந்திரங்கள் மற்றும் வலைகள் கொண்ட பாரிய ஆழ்கடல் மீன்பிடி படகு கடலில் மூழ்கியுள்ளது. படகை மீட்டு கடற்கரைப் பகுதிக்கு இழுப்பதற்கான முயற்சிகள் பல தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.படகானது நங்கூரமிடப்பட்டிருந்த போதிலும், கடலில் விழுந்து மூழ்கியதால் சுமார் ஒரு கோடிக்கு மேல் பெறுமதியான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் சேதமடைந்துள்ளன. படகு கடற்கரைப்பகுதியில் இருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் மூழ்கியுள்ளது.இப்பகுதியில் கடுமையான கடலரிப்பு ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் மற்றும் பிரதேச குடியிருப்பாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கடலரிப்பால் கடற்கரைப் பகுதிகளில் பயன் தரும் தென்னை மரங்கள் வீழ்ந்து, மீனவர்களுக்கு தங்கள் தோணிகள், படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாத்து வைக்க இடவசதி இல்லாமை பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளது.பிரதேச மீனவர்கள், கடலரிப்பை தடுக்கும் தடுப்புக் கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், தொடர்ச்சியான கடலரிப்பு காரணமாக எதிர்காலத்தில் கடற்கரை முழுமையாக அழியக் கூடும் என அச்சம் தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement