• Sep 29 2024

எல்லை நிர்ணய தேசிய குழுவின் இறுதி அறிக்கை தாமதம் - தேர்தலுக்கு பங்கமில்லை - தேசப்பிரிய .!

Tamil nila / Jan 12th 2023, 5:47 pm
image

Advertisement

உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணய தேசிய குழுவின் இறுதி அறிக்கையை வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம் என அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


மூன்று மாவட்ட செயலாளர்களின் பதவி உயர்வு, 4 மாவட்ட செயலாளர்களின் ஓய்வு, 17 புள்ளிவிபரவியல் அதிகாரிகளின் இடமாற்றம், தேர்தல் பணிகள் உள்ளிட்ட காரணங்களால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


குழுவின் இறுதி அறிக்கை பெப்ரவரி 28 ஆம் திகதி அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற போதிலும் தற்போதைய சூழ்நிலை காரணமாக எதிர்வரும் மார்ச் இறுதி வரை அந்த நடவடிக்கை தாமதமாகலாம் என மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.


தனது குழுவின் இறுதி அறிக்கையை சமர்பிப்பதற்கான கால அவகாசத்தை நீடிக்குமாறு அடுத்த வாரம் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எவ்வாறாயினும், தேசிய எல்லை நிர்ணய குழுவின் இறுதி அறிக்கை தாமதமாகின்றமையானது தேர்தலை நடத்துவதற்கு தடையாக இருக்காது என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயத்திற்கான தேசிய குழு பிரதமர் தினேஸ் குணவர்தனவினால் நியமிக்கப்பட்டது.


உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை எண்ணாயிரத்திலிருந்து நான்காயிரமாக குறைப்பதே இந்தக் குழுவை நியமிப்பதன் நோக்கங்களில் ஒன்றாகும்.


எல்லை நிர்ணய தேசிய குழுவின் இறுதி அறிக்கை தாமதம் - தேர்தலுக்கு பங்கமில்லை - தேசப்பிரிய . உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணய தேசிய குழுவின் இறுதி அறிக்கையை வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம் என அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.மூன்று மாவட்ட செயலாளர்களின் பதவி உயர்வு, 4 மாவட்ட செயலாளர்களின் ஓய்வு, 17 புள்ளிவிபரவியல் அதிகாரிகளின் இடமாற்றம், தேர்தல் பணிகள் உள்ளிட்ட காரணங்களால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.குழுவின் இறுதி அறிக்கை பெப்ரவரி 28 ஆம் திகதி அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற போதிலும் தற்போதைய சூழ்நிலை காரணமாக எதிர்வரும் மார்ச் இறுதி வரை அந்த நடவடிக்கை தாமதமாகலாம் என மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.தனது குழுவின் இறுதி அறிக்கையை சமர்பிப்பதற்கான கால அவகாசத்தை நீடிக்குமாறு அடுத்த வாரம் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எவ்வாறாயினும், தேசிய எல்லை நிர்ணய குழுவின் இறுதி அறிக்கை தாமதமாகின்றமையானது தேர்தலை நடத்துவதற்கு தடையாக இருக்காது என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயத்திற்கான தேசிய குழு பிரதமர் தினேஸ் குணவர்தனவினால் நியமிக்கப்பட்டது.உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை எண்ணாயிரத்திலிருந்து நான்காயிரமாக குறைப்பதே இந்தக் குழுவை நியமிப்பதன் நோக்கங்களில் ஒன்றாகும்.

Advertisement

Advertisement

Advertisement