• Jun 26 2024

சுதந்திரக் கொண்டாட்டங்களுக்கு 20 கோடி ரூபாய் செலவாம்! அமைச்சர் தகவல்

Chithra / Jan 12th 2023, 5:52 pm
image

Advertisement

இந்த வருட சுதந்திரக் கொண்டாட்டங்களுக்கு 20 கோடி ரூபாய் செலவாகும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

57 கோடி ரூபாவிற்கும் அதிகமான மதிப்பீடு கிடைத்ததாகவும், ஜனாதிபதி செயலகமும் உள்நாட்டலுவல்கள் அமைச்சும் இணைந்து அவ்வப்போது கலந்துரையாடி 20 கோடியாக குறைத்து மேலும் குறைக்க முயற்சிப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர தின அணிவகுப்பு கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து ஆரம்பமாகவுள்ளதாகவும், கொள்ளுப்பிட்டி சந்தி தொடக்கம் காலி முகத்திடல் வரை மக்கள் அதனை கண்டுகளிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கொண்டாட்டங்களுக்கு 20 கோடி ரூபாய் செலவாம் அமைச்சர் தகவல் இந்த வருட சுதந்திரக் கொண்டாட்டங்களுக்கு 20 கோடி ரூபாய் செலவாகும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.57 கோடி ரூபாவிற்கும் அதிகமான மதிப்பீடு கிடைத்ததாகவும், ஜனாதிபதி செயலகமும் உள்நாட்டலுவல்கள் அமைச்சும் இணைந்து அவ்வப்போது கலந்துரையாடி 20 கோடியாக குறைத்து மேலும் குறைக்க முயற்சிப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.சுதந்திர தின அணிவகுப்பு கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து ஆரம்பமாகவுள்ளதாகவும், கொள்ளுப்பிட்டி சந்தி தொடக்கம் காலி முகத்திடல் வரை மக்கள் அதனை கண்டுகளிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement