• Sep 29 2024

பொதுஜன பெரமுன- ஐ.தே.க இணைந்து செயற்படாவிட்டால் ஆபத்து...! மொட்டு எம்.பி எச்சரிக்கை...!

Sharmi / Jun 26th 2024, 8:53 am
image

Advertisement

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து பயணிக்காவிட்டால் ஜனாதிபதித் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் பின்னடைவு ஏற்படக்கூடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆசியுடன் களமிறங்கினால் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவார்.அவ்வாறு இல்லாவிட்டால் தோல்வியே ஏற்படும்.

ரணிலைப் பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவிக்கு மொட்டுக் கட்சியே கொண்டு வந்தது. 

எனினும், மொட்டுக் கட்சி எதிர்பார்த்த அரசொன்று அமையவில்லை. எனவே, இரு தரப்புக்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் பேச்சு மூலம் தீர்க்கப்பட வேண்டும்.

பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு இணைந்து பயணித்தால் ரணிலுக்கு வெற்றி நிச்சயம். மொட்டுக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் தனிவழியில் சென்றால் இரு தரப்புகளுக்கும் பின்னடைவு ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன- ஐ.தே.க இணைந்து செயற்படாவிட்டால் ஆபத்து. மொட்டு எம்.பி எச்சரிக்கை. மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து பயணிக்காவிட்டால் ஜனாதிபதித் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் பின்னடைவு ஏற்படக்கூடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆசியுடன் களமிறங்கினால் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவார்.அவ்வாறு இல்லாவிட்டால் தோல்வியே ஏற்படும்.ரணிலைப் பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவிக்கு மொட்டுக் கட்சியே கொண்டு வந்தது. எனினும், மொட்டுக் கட்சி எதிர்பார்த்த அரசொன்று அமையவில்லை. எனவே, இரு தரப்புக்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் பேச்சு மூலம் தீர்க்கப்பட வேண்டும்.பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு இணைந்து பயணித்தால் ரணிலுக்கு வெற்றி நிச்சயம். மொட்டுக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் தனிவழியில் சென்றால் இரு தரப்புகளுக்கும் பின்னடைவு ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement