ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் முரண்பட்டுக் கொண்டிருக்கும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தற்போது சஜித்துக்கு எதிராகப் பிரசாரம் பண்ணத் தொடங்கியுள்ளார் என தெரியவருகின்றது.
கெசினோகாரர்களின் பணத்தை வைத்து பாடசாலைகளுக்குப் பொருட்கள் வழங்குபவர்களை நாட்டின் ஜனாதிபதியாக்கினால் நாடு அழிந்து விடும் என்று பொன்சேகா கடந்த நாடாளுமன்ற அமர்வில் சஜித்தை மறைமுகமாகப் போட்டுத் தாக்கியிருந்தார்.
இதன் மூலம் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்கப் போகின்றார் என்ற கேள்வி எழுகின்றது.
அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவார் என்று ஒரு தரப்பும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவு வழங்குவார் என்று இன்னொரு தரப்பும் கருத்துக்களை முன்வைத்துள்ளன.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக சரத் பொன்சேகா களமிறங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சஜித்துக்கு எதிரான பிரசாரத்தில் குதித்த பொன்சேகா; ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் முரண்பட்டுக் கொண்டிருக்கும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தற்போது சஜித்துக்கு எதிராகப் பிரசாரம் பண்ணத் தொடங்கியுள்ளார் என தெரியவருகின்றது.கெசினோகாரர்களின் பணத்தை வைத்து பாடசாலைகளுக்குப் பொருட்கள் வழங்குபவர்களை நாட்டின் ஜனாதிபதியாக்கினால் நாடு அழிந்து விடும் என்று பொன்சேகா கடந்த நாடாளுமன்ற அமர்வில் சஜித்தை மறைமுகமாகப் போட்டுத் தாக்கியிருந்தார்.இதன் மூலம் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்கப் போகின்றார் என்ற கேள்வி எழுகின்றது.அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவார் என்று ஒரு தரப்பும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவு வழங்குவார் என்று இன்னொரு தரப்பும் கருத்துக்களை முன்வைத்துள்ளன.இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக சரத் பொன்சேகா களமிறங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.