• Oct 07 2026

ஒரே வாரத்தில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் இலக்கு! மன்னாரில் என்ன நடக்கிறது? அச்சத்தில் மக்கள்!

Chithra / Oct 7th 2026, 11:53 am
image


மன்னார் மாவட்டத்தில் இந்த மாத ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.


இந்த மாத தொடக்கத்தில் ஒரே நாளில் நான்கு கடைகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து மன்னார் நகரின் பல பகுதிகளிலும் திருட்டுகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.


குறிப்பாக மூர் வீதி, உப்புக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.


இதன்போது கையடக்கத் தொலைபேசிகள், நகைகள், எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோவில் உண்டியல்களில் இருந்த பணம் திருடப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மேலும், சில திருட்டுச் சம்பவங்கள் பட்டப்பகலிலேயே இடம்பெற்று வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.


இதனால் வீடுகள் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், தொடர்ச்சியாக இடம்பெறும் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யச் செல்லும்போது, சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் உரிய ஆதாரங்களுடன் வருமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.


எனவே, மன்னாரில் அதிகரித்து வரும் திருட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரே வாரத்தில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் இலக்கு மன்னாரில் என்ன நடக்கிறது அச்சத்தில் மக்கள் மன்னார் மாவட்டத்தில் இந்த மாத ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.இந்த மாத தொடக்கத்தில் ஒரே நாளில் நான்கு கடைகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து மன்னார் நகரின் பல பகுதிகளிலும் திருட்டுகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.குறிப்பாக மூர் வீதி, உப்புக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.இதன்போது கையடக்கத் தொலைபேசிகள், நகைகள், எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோவில் உண்டியல்களில் இருந்த பணம் திருடப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், சில திருட்டுச் சம்பவங்கள் பட்டப்பகலிலேயே இடம்பெற்று வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.இதனால் வீடுகள் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், தொடர்ச்சியாக இடம்பெறும் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யச் செல்லும்போது, சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் உரிய ஆதாரங்களுடன் வருமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.எனவே, மன்னாரில் அதிகரித்து வரும் திருட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement