• Oct 09 2026

கிண்ணியா வைத்தியசாலை மற்றும் பாடசாலைகளுக்கு ரூ.10 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் வழங்கிவைப்பு

Aathira / Oct 7th 2026, 11:39 am
image

வெளி விவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோரின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், கிண்ணியா வைத்தியசாலை மற்றும் பாடசாலைகளுக்கு சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கான நிகழ்வு இன்று (7) கிண்ணியா பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் எம். எச். எம் கனி தலைமையில் நடைபெற்றது.

கிண்ணியா அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் எம். ஈ. எம். ராபிக் மற்றும் வெளி விவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் அஷ்ரப் இம்ரான் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு உபகரணங்களை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தனர்.

இதன்போது, கிண்ணியா வைத்தியசாலைக்கு சிறுநீரக நோயாளர்களின் பயன்பாட்டுக்கான சுத்திகரிப்பு படுக்கை மற்றும் குளிரூட்டி இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மேலும், கிண்ணியா குறிஞ்சாக்கேணி அரபா மகா வித்தியாலயம் மற்றும் கிண்ணியா அபூபக்கர் வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளுக்கும் அலுவலகத் தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கிண்ணியா வைத்தியசாலை அத்தியட்சகர், வைத்தியர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வழங்கப்பட்ட உபகரணங்களைப் பெற்றுக் கொண்டனர்.

மொத்தமாக சுமார் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கிண்ணியா வைத்தியசாலை மற்றும் பாடசாலைகளுக்கு ரூ.10 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் வழங்கிவைப்பு வெளி விவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோரின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், கிண்ணியா வைத்தியசாலை மற்றும் பாடசாலைகளுக்கு சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.இதற்கான நிகழ்வு இன்று (7) கிண்ணியா பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் எம். எச். எம் கனி தலைமையில் நடைபெற்றது.கிண்ணியா அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் எம். ஈ. எம். ராபிக் மற்றும் வெளி விவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் அஷ்ரப் இம்ரான் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு உபகரணங்களை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தனர்.இதன்போது, கிண்ணியா வைத்தியசாலைக்கு சிறுநீரக நோயாளர்களின் பயன்பாட்டுக்கான சுத்திகரிப்பு படுக்கை மற்றும் குளிரூட்டி இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.மேலும், கிண்ணியா குறிஞ்சாக்கேணி அரபா மகா வித்தியாலயம் மற்றும் கிண்ணியா அபூபக்கர் வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளுக்கும் அலுவலகத் தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டன.இந்நிகழ்வில் கிண்ணியா வைத்தியசாலை அத்தியட்சகர், வைத்தியர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வழங்கப்பட்ட உபகரணங்களைப் பெற்றுக் கொண்டனர்.மொத்தமாக சுமார் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement