களுத்துறை, நாகொட வீதியிலுள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், அதன் உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் இன்று (09) காலை இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அவரது மனைவி சிகிச்சைகளுக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தகவலை பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது..
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்தத் தாக்குதலுக்குத் T-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை குற்றப்பிரிவு, பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு, தடயவியல் பொலிஸார் மற்றும் களுத்துறை தெற்கு பொலிஸார் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும், இந்தத் தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
காலை நேரத்தில் பயங்கரம் உணவக உரிமையாளர் பலி; மனைவி காயம் – துப்பாக்கிச் சூட்டின் பின்னணி என்ன களுத்துறை, நாகொட வீதியிலுள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், அதன் உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் இன்று (09) காலை இடம்பெற்றுள்ளது.இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அவரது மனைவி சிகிச்சைகளுக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்தத் தகவலை பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்தத் தாக்குதலுக்குத் T-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை குற்றப்பிரிவு, பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு, தடயவியல் பொலிஸார் மற்றும் களுத்துறை தெற்கு பொலிஸார் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.எனினும், இந்தத் தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.