முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், 11 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்ததுடன், 30 பேர் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தென்கிழக்கு ஐரோப்பிய நாடான போஸ்னியா ஹெர்சகோவினாவில் பதிவாகியுள்ளது.
போஸ்னியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள துஸ்லா நகரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தின் ஏழாவது மாடியில் குறித்த தீ விபத்து ஏற்பட்டது.
திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு தங்கியிருந்த வயதானவர்களும், உடல்நலம் பாதித்தவர்களும் வெளியேற முடியாமல் தவித்தனர்.
முதியோர் இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அருகிலிருந்தவர்கள் வழங்கிய தகவலையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
எனினும் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ வேகமாகப் பரவியதால், உடல் கருகி முதியவர்கள் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள் உட்பட 30 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், மின்கசிவு காரணமாகக் குறித்த தீ விபத்து நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
உறுதியான காரணம் தெரியாத நிலையில் மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதியோர் இல்லத்தில் திடீரென பரவிய தீ ; உடல் கருகி 11 பேர் உயிரிழப்பு - 30 பேர் படுகாயம் முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், 11 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்ததுடன், 30 பேர் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் தென்கிழக்கு ஐரோப்பிய நாடான போஸ்னியா ஹெர்சகோவினாவில் பதிவாகியுள்ளது. போஸ்னியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள துஸ்லா நகரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தின் ஏழாவது மாடியில் குறித்த தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு தங்கியிருந்த வயதானவர்களும், உடல்நலம் பாதித்தவர்களும் வெளியேற முடியாமல் தவித்தனர். முதியோர் இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அருகிலிருந்தவர்கள் வழங்கிய தகவலையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். எனினும் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ வேகமாகப் பரவியதால், உடல் கருகி முதியவர்கள் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள் உட்பட 30 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், மின்கசிவு காரணமாகக் குறித்த தீ விபத்து நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. உறுதியான காரணம் தெரியாத நிலையில் மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.