செங்கடலில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்ற கப்பலில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிப்பதாக ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர்.
அதன் எதிரொலியாக செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், செங்கடல் வழியாக சென்ற 1 லட்சத்து 50 ஆயிரம் தொன் எடை கொண்ட கச்சா எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு கிரீஸ் நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது.
இந்த கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த வாரம் தாக்குதல் நடத்திய நிலையில் கப்பலை கைவிட்டுவிட்டு சிப்பந்திகள் வெளியேறினர்.
இந்த நிலையில், செங்கடலில் நின்று கொண்டிருந்த இந்த கப்பலில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
செங்கடலில் நின்று கொண்டிருந்த கப்பலில் தீ விபத்து செங்கடலில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்ற கப்பலில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிப்பதாக ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர்.அதன் எதிரொலியாக செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில், செங்கடல் வழியாக சென்ற 1 லட்சத்து 50 ஆயிரம் தொன் எடை கொண்ட கச்சா எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு கிரீஸ் நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது.இந்த கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த வாரம் தாக்குதல் நடத்திய நிலையில் கப்பலை கைவிட்டுவிட்டு சிப்பந்திகள் வெளியேறினர். இந்த நிலையில், செங்கடலில் நின்று கொண்டிருந்த இந்த கப்பலில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.