• Nov 21 2024

மட்டக்களப்பு குருக்கள் மடம் பறவைகள் சரணாலயத்தில் தீப்பரவல்

Anaath / Sep 26th 2024, 4:14 pm
image

மட்டக்களப்பு குருக்கள் மடம் பறவைகள் சரணாலயத்தின் துறையடி வீதியில்  தீப்பரவல் இன்றைய தினம் ( 26)  காலை 7:45 மணியளவில் இந்த தீச்சம்பவம் பதிவாகியுள்ளது. 

பின்னர் மெது மெதுவாக பரவ ஆரம்பித்து  சரணாலயத்தினை பாதித்துள்ளது. 

குருக்கள் மடம் பறவைகள் சரணாலயத்தில்  இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது பின்னர்  தீப்பரவல்  சம்பவத்தினை கட்டுப்படுத்துவதற்கு, 

கிராம பொதுமக்கள்  மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகள் மண்முனை தென் எருவில் பற்று உதவி  பிரதேச செயலாளர் சத்தியகௌரி தரணிதரன்  அதிகாரிகள், மண்முனை  தென் எருவில் பற்று பிரதேச சபையினுடைய  நீர்தாங்கிபௌசர் மூலம் ஆரம்ப கட்டத்தில் தீப்பரவலை  கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன எனினும் அந் நிலைமையை கட்டுபாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை 

பின்னர் சம்பவ இடத்துக்கு குருக்கள்மடம்  இராணுவத்தினர்  மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினர் வருகை தந்து நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ்  கொண்டு வந்தனர். 

சுமார் 4 மணித்தியாலங்கள் போராட்டத்தின் பின்னர் 12.45 மணியளவில்  இந்த தீச்சம்பவம் முற்றாக தடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

மட்டக்களப்பு குருக்கள்மடம் பறவைகள் சரணாலயம் கடந்த ஏப்ரல் மாதம்  பறவைகள் சரணாலயமாக பிரகடனப்படுத்தப்பட்டதுடன் கிழக்கு மாகாணத்தில் முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயமாக  இது காணப்படுகிறது.மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் கண்காணிப்பின் கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

இப்பறவைகள் சரணாலயத்திற்கு இலட்ச கணக்கிலான உள்நாட்டு,வெளிநாட்டு பறவைகள் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதனால் இப் பறவைகளின் நிலைத்திருப்பிற்கு இச் சம்பவம் சிக்கலானதாக அமைந்ததாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சந்தர்ப்பத்தில் பறவைகள் எதற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பேராபத்து வராமல் பாதுகாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுற்று சூழல் அதிகார சபை மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் என்பன மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான  சொத்துக்களை பாதுகாக்க வேண்டியதை அனைவரும் அல்லவா...

இதனால் அப்புறம் தேசத்தில் காணப்படுகின்ற பறவைகளுக்கு எந்தவிதமான சேதங்கள் ஏற்படவில்லை நமது அப்பகுதியில் காணப்பட்ட வரவேற்ற தற்சமயம் பறந்து சென்றமையினரில் அவதானிக்க கூடியதாக உள்ளது.

மட்டக்களப்பு குருக்கள் மடம் பறவைகள் சரணாலயத்தில் தீப்பரவல் மட்டக்களப்பு குருக்கள் மடம் பறவைகள் சரணாலயத்தின் துறையடி வீதியில்  தீப்பரவல் இன்றைய தினம் ( 26)  காலை 7:45 மணியளவில் இந்த தீச்சம்பவம் பதிவாகியுள்ளது. பின்னர் மெது மெதுவாக பரவ ஆரம்பித்து  சரணாலயத்தினை பாதித்துள்ளது. குருக்கள் மடம் பறவைகள் சரணாலயத்தில்  இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது பின்னர்  தீப்பரவல்  சம்பவத்தினை கட்டுப்படுத்துவதற்கு, கிராம பொதுமக்கள்  மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகள் மண்முனை தென் எருவில் பற்று உதவி  பிரதேச செயலாளர் சத்தியகௌரி தரணிதரன்  அதிகாரிகள், மண்முனை  தென் எருவில் பற்று பிரதேச சபையினுடைய  நீர்தாங்கிபௌசர் மூலம் ஆரம்ப கட்டத்தில் தீப்பரவலை  கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன எனினும் அந் நிலைமையை கட்டுபாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை பின்னர் சம்பவ இடத்துக்கு குருக்கள்மடம்  இராணுவத்தினர்  மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினர் வருகை தந்து நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ்  கொண்டு வந்தனர். சுமார் 4 மணித்தியாலங்கள் போராட்டத்தின் பின்னர் 12.45 மணியளவில்  இந்த தீச்சம்பவம் முற்றாக தடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு குருக்கள்மடம் பறவைகள் சரணாலயம் கடந்த ஏப்ரல் மாதம்  பறவைகள் சரணாலயமாக பிரகடனப்படுத்தப்பட்டதுடன் கிழக்கு மாகாணத்தில் முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயமாக  இது காணப்படுகிறது.மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் கண்காணிப்பின் கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .இப்பறவைகள் சரணாலயத்திற்கு இலட்ச கணக்கிலான உள்நாட்டு,வெளிநாட்டு பறவைகள் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதனால் இப் பறவைகளின் நிலைத்திருப்பிற்கு இச் சம்பவம் சிக்கலானதாக அமைந்ததாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.இச்சந்தர்ப்பத்தில் பறவைகள் எதற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பேராபத்து வராமல் பாதுகாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுற்று சூழல் அதிகார சபை மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் என்பன மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இவ்வாறான  சொத்துக்களை பாதுகாக்க வேண்டியதை அனைவரும் அல்லவா.இதனால் அப்புறம் தேசத்தில் காணப்படுகின்ற பறவைகளுக்கு எந்தவிதமான சேதங்கள் ஏற்படவில்லை நமது அப்பகுதியில் காணப்பட்ட வரவேற்ற தற்சமயம் பறந்து சென்றமையினரில் அவதானிக்க கூடியதாக உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement