• Sep 27 2024

இலாபத்தை மாத்திரம் நோக்காக கொண்டு செயற்படும் பெருந்தோட்ட நிறுவனங்கள்- சிவசுந்தரம் சுட்டிக்காட்டு..!

Sharmi / Sep 26th 2024, 4:10 pm
image

Advertisement

தோட்ட நிர்வாகங்களும் பெருந்தோட்ட கம்பெனிகளும் தோட்டங்களை சரியாக பராமரிக்காது லாபத்தை மாத்திரம் நோக்காக கொண்டு செயற்படுவதனால் தேயிலை தோட்டங்களில் பெரும் பகுதி காடாகி வருகிறது.

இதன் காரணமாக வேலைத்தளங்களில் தொழிலாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல்கள் ஏற்படுவதோடு தேசிய வருமானத்தில் பெரும் பகுதியினை இழப்பதற்கு வழிவகுக்கிறது என்று செங்கொடி சங்கத்தின் தலைவர் எஸ். சிவசுந்தரம் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

தோட்ட நிர்வாகங்கள் இலாபத்தை மாத்திரம் கருத்திக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. உதாரணமாக தேயிலை கொழுந்து பரிக்கும் பணிக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு ஏனைய தோட்ட பராமரிப்பு வேலைக்கு எவ்விதமான பங்களிப்பும் வழங்குவதில்லை. 

ஆரம்ப காலங்களில் ஆண் தொழிலாளர்கள் தோட்ட பராமரிப்பு வேலைகளிலும் பெண் தொழிலாளர்கள் கொழுந்து பறிக்கும் வேலைகளிலும் ஈடுபட்டனர்.

தற்போது மத்திய மலை நாட்டில் உள்ள பல தோட்டங்கள் பராமரிக்கப்படாததால் காடாகி வருகின்றது. 

இதனால் பெருந்தோட்ட பகுதிகளில் காட்டு மிருகங்கள் குறிப்பாக சிறுத்தை, புலி, பன்றி, ஏனை காட்டு மிருகங்கள் விஷ ஜந்துங்கள் ,விஷ அட்டைகள், குளவி கூடுகள் அதிகரித்துள்ளது.

நாளாந்தம் பெருந்தோட்ட தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வருவதுடன் அட்டைக்கடி ஏனைய காட்டு மிருகங்களினால் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதால் பலர் உயிர் நீத்தும் உள்ளனர்.

தோட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு சிறுத்தைகள் ,புலி, மற்றும் ஏனைய வன விலங்குகள் வந்து செல்வதை காணக் கூடியதாக உள்ளது. இதனால் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களைப் போல் முறையாக தேயிலை செடிகளை துப்புரவு பண்ணாத காரணமாக தேயிலை செடியின் வேர் பகுதியில் குளவி கூடுகள் கட்டி இருப்பதால் பெண் தொழிலாளர்கள் தங்களது பணியில் ஈடுபடும் போது தேயிலை செடிகள் அசைவதனால் குளவி கூடுகள் களைந்து அவர்களை தாக்குவது இயல்பாகி விட்டது. 

இவ்வாறு குளவி கொடடுக்கு இலக்காகும் தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகம் எவ்விதமான கொடுப்பனவுகளையோ நாளாந்த வேதனத்தையோ நட்ட ஈட்டையோ வழங்குவதில்லை அதே போல் வனவிலங்குகளால் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் காயம் அடந்தவர்கள்  மரணித்தவர்களுக்கு இது காலம் வரை கொடுப்பனவுகள் வழங்குவது இல்லை.

இதன் காரணமாகவும் பெருந்தோட்டங்களில் தற்போது பெருகியுள்ள விஷ அட்டைகள் காரணமாக பணிக்கு செல்ல முடியாது தோட்ட பணியில் இருந்து விலகி செல்வதை காணக் கூடியதாக உள்ளது.

தற்போது மத்திய மலைநாட்டில் உள்ள அனைத்து தேயிலை தோட்டங்களிலும் விஷ அட்டைகள் பெருகி விட்டதால் அட்டை கடிக்கு உள்ளான தொழிலாளர்கள் சர்ம்ம நோய்க்கு பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.

ஆகவே, இது விடயத்தில் தோட்ட நிர்வாகங்கள் துரித நடவடிக்கை எடுத்து காடாகி கிடக்கும் தேயிலைத் தோட்டங்களை மீள் சுத்திகரிப்பதோடு தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்புக்கும் உறுதி செய்வதுடன் இந்த பிரச்சனைக்கு நிவர்த்தி  செய்யுமாறு செல்லையா சிவசுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலாபத்தை மாத்திரம் நோக்காக கொண்டு செயற்படும் பெருந்தோட்ட நிறுவனங்கள்- சிவசுந்தரம் சுட்டிக்காட்டு. தோட்ட நிர்வாகங்களும் பெருந்தோட்ட கம்பெனிகளும் தோட்டங்களை சரியாக பராமரிக்காது இலாபத்தை மாத்திரம் நோக்காக கொண்டு செயற்படுவதனால் தேயிலை தோட்டங்களில் பெரும் பகுதி காடாகி வருகிறது.இதன் காரணமாக வேலைத்தளங்களில் தொழிலாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல்கள் ஏற்படுவதோடு தேசிய வருமானத்தில் பெரும் பகுதியினை இழப்பதற்கு வழிவகுக்கிறது என்று செங்கொடி சங்கத்தின் தலைவர் எஸ். சிவசுந்தரம் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,தோட்ட நிர்வாகங்கள் இலாபத்தை மாத்திரம் கருத்திக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. உதாரணமாக தேயிலை கொழுந்து பரிக்கும் பணிக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு ஏனைய தோட்ட பராமரிப்பு வேலைக்கு எவ்விதமான பங்களிப்பும் வழங்குவதில்லை. ஆரம்ப காலங்களில் ஆண் தொழிலாளர்கள் தோட்ட பராமரிப்பு வேலைகளிலும் பெண் தொழிலாளர்கள் கொழுந்து பறிக்கும் வேலைகளிலும் ஈடுபட்டனர்.தற்போது மத்திய மலை நாட்டில் உள்ள பல தோட்டங்கள் பராமரிக்கப்படாததால் காடாகி வருகின்றது. இதனால் பெருந்தோட்ட பகுதிகளில் காட்டு மிருகங்கள் குறிப்பாக சிறுத்தை, புலி, பன்றி, ஏனை காட்டு மிருகங்கள் விஷ ஜந்துங்கள் ,விஷ அட்டைகள், குளவி கூடுகள் அதிகரித்துள்ளது.நாளாந்தம் பெருந்தோட்ட தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வருவதுடன் அட்டைக்கடி ஏனைய காட்டு மிருகங்களினால் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதால் பலர் உயிர் நீத்தும் உள்ளனர்.தோட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு சிறுத்தைகள் ,புலி, மற்றும் ஏனைய வன விலங்குகள் வந்து செல்வதை காணக் கூடியதாக உள்ளது. இதனால் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.கடந்த காலங்களைப் போல் முறையாக தேயிலை செடிகளை துப்புரவு பண்ணாத காரணமாக தேயிலை செடியின் வேர் பகுதியில் குளவி கூடுகள் கட்டி இருப்பதால் பெண் தொழிலாளர்கள் தங்களது பணியில் ஈடுபடும் போது தேயிலை செடிகள் அசைவதனால் குளவி கூடுகள் களைந்து அவர்களை தாக்குவது இயல்பாகி விட்டது. இவ்வாறு குளவி கொடடுக்கு இலக்காகும் தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகம் எவ்விதமான கொடுப்பனவுகளையோ நாளாந்த வேதனத்தையோ நட்ட ஈட்டையோ வழங்குவதில்லை அதே போல் வனவிலங்குகளால் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் காயம் அடந்தவர்கள்  மரணித்தவர்களுக்கு இது காலம் வரை கொடுப்பனவுகள் வழங்குவது இல்லை.இதன் காரணமாகவும் பெருந்தோட்டங்களில் தற்போது பெருகியுள்ள விஷ அட்டைகள் காரணமாக பணிக்கு செல்ல முடியாது தோட்ட பணியில் இருந்து விலகி செல்வதை காணக் கூடியதாக உள்ளது.தற்போது மத்திய மலைநாட்டில் உள்ள அனைத்து தேயிலை தோட்டங்களிலும் விஷ அட்டைகள் பெருகி விட்டதால் அட்டை கடிக்கு உள்ளான தொழிலாளர்கள் சர்ம்ம நோய்க்கு பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.ஆகவே, இது விடயத்தில் தோட்ட நிர்வாகங்கள் துரித நடவடிக்கை எடுத்து காடாகி கிடக்கும் தேயிலைத் தோட்டங்களை மீள் சுத்திகரிப்பதோடு தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்புக்கும் உறுதி செய்வதுடன் இந்த பிரச்சனைக்கு நிவர்த்தி  செய்யுமாறு செல்லையா சிவசுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement