• Oct 09 2024

சஜித்தின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பட்டாசு வெடிப்பு - பொலிஸார் ஐவர் மருத்துவனையில் அனுமதி

Chithra / Sep 9th 2024, 4:55 pm
image

Advertisement

 


ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து, கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக பேரணி ஆரம்பிக்கப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக ஆதரவாளர்கள் பெருந்தொகையான பட்டாசுகளை வெடிக்கச் செய்ததில் பொலிஸார் 5 பேர் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர்.


காயமடைந்தவர்கள் தற்போது கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


பாதுகாப்பு கடமைகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த 5 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக பொதுமக்களில் இருவரும் காயமடைந்தனர்.


விபத்து இடம்பெற்ற போது கடமையில் இருந்த ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.


ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பங்கேற்றுள்ள மேற்படி பேரணி கண்டியில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

சஜித்தின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பட்டாசு வெடிப்பு - பொலிஸார் ஐவர் மருத்துவனையில் அனுமதி  ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து, கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக பேரணி ஆரம்பிக்கப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக ஆதரவாளர்கள் பெருந்தொகையான பட்டாசுகளை வெடிக்கச் செய்ததில் பொலிஸார் 5 பேர் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் தற்போது கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பாதுகாப்பு கடமைகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த 5 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக பொதுமக்களில் இருவரும் காயமடைந்தனர்.விபத்து இடம்பெற்ற போது கடமையில் இருந்த ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பங்கேற்றுள்ள மேற்படி பேரணி கண்டியில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement