• Dec 11 2024

தீயணைப்பு வீரர்களின் விடுமுறைகள் இரத்து!

Chithra / Nov 13th 2024, 2:53 pm
image

 

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலை கருத்திற்கொண்டு ஏதேனும் அவசரச் சூழலை எதிர்கொள்ளும் வகையில் கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களும் இன்று  முதல்  15 ஆம் திகதி வரை விடுமுறைகள் இரத்து செய்யப்படுவதாக பிராந்திய தீயணைப்பு அதிகாரி ரோஹன நிஷாந்த சேனாநாயக்க தெரிவித்தார்.

இதன்படி, தீயணைப்பு சேவை திணைக்கள தலைமையகம், ஹெட்டியாவத்தை, க்ரேன்ட்பாஸ், வெள்ளவத்தை கோட்டை மற்றும் மடிவெல உப நிலையங்களில் உள்ள சுமார் 300 ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரதான வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் கொழும்பு றோயல் மற்றும் டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி மைதானங்களில் உப சேவை நிலையங்களுக்கு மேலதிகமாக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் இரண்டு அம்பியூலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், ஏறக்குறைய 50 தீயணைப்பு வாகனங்கள், 12 உயிர்காக்கும் வாகனங்கள் மற்றும் 5 ஆம்புலன்ஸ்கள் எந்த நேரத்திலும் அனுப்பிவைக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ரோஹன நிஷாந்த சேனாநாயக்க மேலும் தெரிவித்தார்.

தீயணைப்பு வீரர்களின் விடுமுறைகள் இரத்து  2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலை கருத்திற்கொண்டு ஏதேனும் அவசரச் சூழலை எதிர்கொள்ளும் வகையில் கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களும் இன்று  முதல்  15 ஆம் திகதி வரை விடுமுறைகள் இரத்து செய்யப்படுவதாக பிராந்திய தீயணைப்பு அதிகாரி ரோஹன நிஷாந்த சேனாநாயக்க தெரிவித்தார்.இதன்படி, தீயணைப்பு சேவை திணைக்கள தலைமையகம், ஹெட்டியாவத்தை, க்ரேன்ட்பாஸ், வெள்ளவத்தை கோட்டை மற்றும் மடிவெல உப நிலையங்களில் உள்ள சுமார் 300 ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.பிரதான வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் கொழும்பு றோயல் மற்றும் டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி மைதானங்களில் உப சேவை நிலையங்களுக்கு மேலதிகமாக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் இரண்டு அம்பியூலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.மேலும், ஏறக்குறைய 50 தீயணைப்பு வாகனங்கள், 12 உயிர்காக்கும் வாகனங்கள் மற்றும் 5 ஆம்புலன்ஸ்கள் எந்த நேரத்திலும் அனுப்பிவைக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ரோஹன நிஷாந்த சேனாநாயக்க மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement