• Nov 24 2024

கடற்றொழில் அமைச்சரினால் இரணைமடு நன்னீர் மீனவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு...!

Sharmi / Feb 29th 2024, 4:18 pm
image

கிளிநொச்சி இரணைமடு நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் உதவிகள்  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று காலை 11.30 மணியளவில் இரணைமடு மீனவர்சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது, குளத்தில் மீன் குஞ்சுகள் விடப்பட்டதுடன், மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வலைகளும் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த பகுதியில் அமைக்கப்பட்ட நன்னீர் மீன் விற்பனை நிலையமும், சிறுவர் பூங்காவும் அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.  

இந்நிகழ்வில் கடத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அரச உத்தியோகத்தர்கள், மீனவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


கடற்றொழில் அமைச்சரினால் இரணைமடு நன்னீர் மீனவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு. கிளிநொச்சி இரணைமடு நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் உதவிகள்  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைக்கப்பட்டது.குறித்த நிகழ்வு இன்று காலை 11.30 மணியளவில் இரணைமடு மீனவர்சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.இதன்போது, குளத்தில் மீன் குஞ்சுகள் விடப்பட்டதுடன், மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வலைகளும் வழங்கி வைக்கப்பட்டது.குறித்த பகுதியில் அமைக்கப்பட்ட நன்னீர் மீன் விற்பனை நிலையமும், சிறுவர் பூங்காவும் அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.  இந்நிகழ்வில் கடத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அரச உத்தியோகத்தர்கள், மீனவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement