• Jan 27 2025

வடமராட்சி கடலில் கைகலப்பில் முடிந்த மீனவர்களின் வாக்குவாதம்..!

Sharmi / Jan 25th 2025, 10:30 pm
image

வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக ஒருவர் காயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று (25)காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வத்திராயன் பகுதியை சேர்ந்த கடற்றொழிலாளி ஒருவரின் வலைகள் கடலில் அறுத்தெறியப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட இன்னொரு படகில் வந்தவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதன்போது, குறித்த கடற்றொழிலாளியின் படகின் மீது மூன்று தடவைகள் மற்றுமொரு படகால் மோதி மூழ்கடிக்க முனைந்துள்ளார்கள். 

இச் சம்பவத்தில் படகில் இருந்து காயங்களுடன் தூக்கி எறியப்பட்ட குறித்த கடற்றொழிலாளி, கடலில் மூழ்கி உயிருக்கு போராடிய நிலையில் அவருடன் தொழிலுக்கு சென்ற மீனவரால் காப்பாற்றப்பட்டார்.

இதனையடுத்து அவர் காயங்களுடன் மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகள் இடம்பெற்று வருவதுடன், மருதங்கேணி பொலிசார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபரை பார்வையிடுவதற்காக ஊடகவியலாளர்கள் சென்றவேளை ஊடகவியலாளர்களுக்கு பார்வையிட அனுமதி கடமையில் இருந்த வைத்தியரால் மறுக்கப்பட்டதுடன் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவருக்கு அனுமதி அளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

வடமராட்சி கடலில் கைகலப்பில் முடிந்த மீனவர்களின் வாக்குவாதம். வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக ஒருவர் காயமடைந்துள்ளார்.இச் சம்பவம் இன்று (25)காலை இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வத்திராயன் பகுதியை சேர்ந்த கடற்றொழிலாளி ஒருவரின் வலைகள் கடலில் அறுத்தெறியப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட இன்னொரு படகில் வந்தவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது, குறித்த கடற்றொழிலாளியின் படகின் மீது மூன்று தடவைகள் மற்றுமொரு படகால் மோதி மூழ்கடிக்க முனைந்துள்ளார்கள். இச் சம்பவத்தில் படகில் இருந்து காயங்களுடன் தூக்கி எறியப்பட்ட குறித்த கடற்றொழிலாளி, கடலில் மூழ்கி உயிருக்கு போராடிய நிலையில் அவருடன் தொழிலுக்கு சென்ற மீனவரால் காப்பாற்றப்பட்டார்.இதனையடுத்து அவர் காயங்களுடன் மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகள் இடம்பெற்று வருவதுடன், மருதங்கேணி பொலிசார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபரை பார்வையிடுவதற்காக ஊடகவியலாளர்கள் சென்றவேளை ஊடகவியலாளர்களுக்கு பார்வையிட அனுமதி கடமையில் இருந்த வைத்தியரால் மறுக்கப்பட்டதுடன் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவருக்கு அனுமதி அளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement