இலங்கை வருகை தந்துள்ள தமிழக மீனவர் குழு மீனவர்களுடனும் வடக்கு அரசியல் பிரமுகர்களுடனும் பல்வேறு சந்திப்புக்களை மேற் கொண்டுள்ள நிலையில் இந்திய மீனவர்கள் குழு சுதந்திரமாக யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம் ஆனால் எங்களுடைய பிரச்சினை எங்களுடைய நிலைப்பாடு என்பது 2016 ஆண்டு டில்லியில் எட்டப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளும் தீர்வுதான் தீர்வு என்பதை மீனவர் சமூகம் தெளிவாக கூறியுள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னராசா தெரிவித்துள்ளார்.
யாழில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழக மீனவர் குழு இலங்கையில் யாருடன் பேசினாலும் நாங்கள் அதை வரவேற்கின்றோம்.
ஆனால் எங்கள் முடிவு இறைமை உள்ள இலங்கை கடற்பகுதிக்குள் இழுவை மடியுடன் வரும் இந்திய மீனவர்கள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் இல்லையே சட்டம் தன் கடமையை செய்யும் என்பதில் மீனவர்கள் தெளிவாக இருக்கிறோம்.
இதற்கு பக்கபலமாக அல்லது ஆதரவாக யார் இந்திய மீனவர்களுடன் கதைத்து ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தாலும் நாங்கள் அதை ஏற்றுக்கொள்வோம்.
எங்களுடைய தேவை நாங்கள் எங்களுடைய கடலில் சுதந்திரமாக மீன்பிடியில் ஈடுபட்டு எதிர்கால சந்ததிக்கு இந்த கடலை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.
அண்மையில் இடம்பெற்ற தமிழக மீனவர்களுடனான சந்திப்பில் பல்வேறு விடயங்களை நாங்கள் பேசியுள்ளோம்.
அதற்கு பலர் ஆதரவு வழங்கியுள்ளனர். இம்முறை நாம் ஒரு தரப்பு தமிழக மீனவர்களுடனேயே பேசியுள்ளோம். எதிர்காலத்தில் நாகபட்டினம்,காரைக்கால்,தொண்டி போன்ற மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களுடனும் கலந்துரையாட தீர்மானித்துள்ளோம்
மீண்டும் இந்த பேச்சு வார்த்தைகள் தொடரும். வடமாகாண கடற்றொழிலாளர் இணையம், வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தின் பிரதிநிதிகள், இணைந்து இந்த பணியை முன்னெடுப்பார்கள்.
எதிர்காலத்தில் தமிழ்நாட்டுக்கு சென்று பேசவும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் தயாராக இருக்கின்றது.
தமிழ்நாட்டு மீனவர்கள் எதிர்வரும் 2 திகதி தமிழ் நாட்டுக்கு செல்கின்றார்கள். காரைக்கால் நாகபட்டினத்தோடு இணைந்து அடுத்த கட்ட பேச்சு வார்த்தையை விரைவில் ஆரம்பிப்போம்.
எங்களுக்கு தேவை எங்கள் இறைமை உள்ள கடலிலே சூழலையும் எங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்காத வகையிலே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதே எனவும் அவர் தெரிவித்தார்.
மீனவர் பிரச்சினை: தமிழக மீனவர் குழு இலங்கையில் யாரையும் சந்திக்க முடியும்- அன்னராசா சுட்டிக்காட்டு. இலங்கை வருகை தந்துள்ள தமிழக மீனவர் குழு மீனவர்களுடனும் வடக்கு அரசியல் பிரமுகர்களுடனும் பல்வேறு சந்திப்புக்களை மேற் கொண்டுள்ள நிலையில் இந்திய மீனவர்கள் குழு சுதந்திரமாக யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம் ஆனால் எங்களுடைய பிரச்சினை எங்களுடைய நிலைப்பாடு என்பது 2016 ஆண்டு டில்லியில் எட்டப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளும் தீர்வுதான் தீர்வு என்பதை மீனவர் சமூகம் தெளிவாக கூறியுள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னராசா தெரிவித்துள்ளார்.யாழில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,தமிழக மீனவர் குழு இலங்கையில் யாருடன் பேசினாலும் நாங்கள் அதை வரவேற்கின்றோம்.ஆனால் எங்கள் முடிவு இறைமை உள்ள இலங்கை கடற்பகுதிக்குள் இழுவை மடியுடன் வரும் இந்திய மீனவர்கள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் இல்லையே சட்டம் தன் கடமையை செய்யும் என்பதில் மீனவர்கள் தெளிவாக இருக்கிறோம்.இதற்கு பக்கபலமாக அல்லது ஆதரவாக யார் இந்திய மீனவர்களுடன் கதைத்து ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தாலும் நாங்கள் அதை ஏற்றுக்கொள்வோம்.எங்களுடைய தேவை நாங்கள் எங்களுடைய கடலில் சுதந்திரமாக மீன்பிடியில் ஈடுபட்டு எதிர்கால சந்ததிக்கு இந்த கடலை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.அண்மையில் இடம்பெற்ற தமிழக மீனவர்களுடனான சந்திப்பில் பல்வேறு விடயங்களை நாங்கள் பேசியுள்ளோம்.அதற்கு பலர் ஆதரவு வழங்கியுள்ளனர். இம்முறை நாம் ஒரு தரப்பு தமிழக மீனவர்களுடனேயே பேசியுள்ளோம். எதிர்காலத்தில் நாகபட்டினம்,காரைக்கால்,தொண்டி போன்ற மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களுடனும் கலந்துரையாட தீர்மானித்துள்ளோம் மீண்டும் இந்த பேச்சு வார்த்தைகள் தொடரும். வடமாகாண கடற்றொழிலாளர் இணையம், வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தின் பிரதிநிதிகள், இணைந்து இந்த பணியை முன்னெடுப்பார்கள்.எதிர்காலத்தில் தமிழ்நாட்டுக்கு சென்று பேசவும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் தயாராக இருக்கின்றது.தமிழ்நாட்டு மீனவர்கள் எதிர்வரும் 2 திகதி தமிழ் நாட்டுக்கு செல்கின்றார்கள். காரைக்கால் நாகபட்டினத்தோடு இணைந்து அடுத்த கட்ட பேச்சு வார்த்தையை விரைவில் ஆரம்பிப்போம்.எங்களுக்கு தேவை எங்கள் இறைமை உள்ள கடலிலே சூழலையும் எங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்காத வகையிலே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதே எனவும் அவர் தெரிவித்தார்.